மனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் ஒரு லட்சத்து 90 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத்தொடங்கிய சீனாவை விட ஐரோப்பிய நாடுகளில் இந்நோயால் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகள் முழுவதையும் ஆட்கொண்டு ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சீனாவில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது போன்று தெரிந்தாலும், இத்தாலியில் அதை விட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக மக்களை குலை நடுங்கச் செய்தன. அமெரிக்காவில் இன்று ஒரே நாளில் 1152 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 953 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் இன்று ஒரே நாளில் 496 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இதுவரை இத்தாலியில் 18, 279 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் ஜெர்மனியில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால் கடந்த 10 நாட்களில் தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்னர் இருந்த நிலையை விட இந்த 10 நாட்களில் மட்டும் 6% கூடுதலான உயிரிழப்புகள் உலகளவில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே சற்றே ஆறுதல் அடையக் கூடிய விவகாரம் என்னவென்றால் உலகளவில் 3,69,017 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தொடக்கத்திலேயே அறிகுறி கண்டறிந்து முறையான சிகிச்சை, நோயிலிருந்து மீள்வோம் என்ற நேர்மறை எண்ணங்கள், காரணமாக இவர்கள் நலம் பெற்றதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications