Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணனுக்கு நாங்க தான் செய்வோம்.. சென்னையில் டிடிஎப் வாசன் கடையில் திருடிய 2 பேர்.. காரணத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் டிடிஎப் வாசன் உள்பட 7 பேரின் கடையில் திருடிய 2 பேரில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அண்ணனின் பிறந்தநாளுக்கு ஹெல்மெட் பரிசளிக்க அவர்கள் டிடிஎப் வாசன் கடையில் கைவரிசை காட்டிய நிலையில் போலீசில் சிக்கி உள்ளனர்.

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் அம்பத்தூர் அய்யம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

ttf vasan shop theft

இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி அந்த பகுதியில் உள்ள 7 கடைகளின் பூட்டை உடைத்து 2 மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் கடைகளில் இருந்து பணம், பொருட்களை திருடி சென்றனர்.

முதலில் அவர்கள் அந்த பகுதியில் உள்ள மெடிக்கலில் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடினர். காலணி விற்கும் கடைகளில் ரூ.20 ஆயிரம், உணவகத்தில் ரூ.30 ஆயிரத்தையும், மளிகை கடையில் ரூ.4 ஆயிரத்தையும் திருடினர். அதேபோல் டிடிஎப் வாசன் கடைக்குள் நுழைந்த மர்மநபர்கள் விலையுயர்ந்த 3 ஹெல்மெட்டுகள், ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுதவிர மேலும் 2 கடைகளிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருடினர்.

மறுநாள் காலையில் கடைக்கு வந்தவர்கள் திருட்டு நடந்து இருப்பதை அறிந்து திருமுல்லைவாயில் போலீசில் புகார் செய்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்து 2 மர்மநபர்கள் 7 கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த விசாரணையை தொடர்ந்து வில்லிவாக்கத்தை சேர்ந்த சைத்தன்யா என்ற சோனுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிவா என்பவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும், மழை பெய்யும்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்காது என்பதால் அவர்கள் திட்டமிட்டு மழை பெய்யும்போது கைவரிசை காட்டியது தெரியவந்தது.

அதோடு சிவாவின் அண்ணன் அருண் பிறந்தநாள் விரைவில் வர உள்ளது. இந்த பிறந்தநாளை கொண்டாட பணம் தேவை என்பதால் சைத்தன்யா, சிவா ஆகியோர் கைவரிசை காட்டியதும், பிறந்தநாளை கொண்டாட உள்ள அருண் மீதும் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. தற்போது சிவா, அருண் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+