Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேலும் ஒரு சர்ச்சை! விடுதலை படத்தின் பாத்திரங்களும் வரலாற்றுப் பிழையும்- சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதா பாத்திரங்களில் பெரும் வரலாற்று பிழைகளை செய்திருக்கிறார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் விரிவான் பதிவு: விடுதலையும், விடுதலை அடையாத இயக்குநர் வெற்றிமாறனின் மனசும் .

நேற்று இரவு என் குமாரபாளையம் தோழமைகளுடன் சேர்ந்து விடுதலை படம் பார்த்தேன், இந்த படம் முழுமையான (வெற்றிமாறன் அவர்கள் ) என் கற்பனைக்கதையே என்பதை அழுத்தி அழுத்தி சொல்கிறார்.

விடுதலை படம் making நன்றாக உள்ளது. ஆனால் வெற்றிமாறன் மிக பெரிய வரலாற்று பிழையை செய்ததோடல்லாமல் சோளகர் தொட்டி கதையைக் களவாடவும் செய்துள்ளார்.

தோழர் தமிழரசன் (TA) ஐயா புலவர் கலியம் பெருமாள் (படத்தில் வாத்தியார் பெருமாள்) போன்றவர்களின் போராட்ட களம் .அரியலூர், கடலூர்,விழுப்புரம், வட ஆற்காடு மாவட்டம் போன்ற பகுதிகளில் உள்ள முந்திரிக்காடும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளாகத்தான் இருந்தது.

அங்கு வனமோ, பழங்குடிகளோ இல்லை. அவர்களது போராட்ட களம் என்பது சமவெளியை சுற்றியதாக இருந்தது. குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள வாத்தியார் பாத்திரம் தோழர் கலியபெருமாள் அவர்களுடையது. தோழர் கலியபெருமாள் எந்த இடத்திலும் தன் கையால் யாரையும் கொலை செய்யவில்லை என்பது வரலாற்று உண்மை.

One More Controversy on Vetri Maran Viduthalai Film

தோழர் தமிழரசன் (TA) தலைமையிலும், தோழர் கலியபெருமாள் தலைமையிலும் நடந்த போராட்டம் என்பது வெறும் mines கம்பெனிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. அந்த வரலாற்று பார்வையை சுருக்கி காட்டும் பெரிய வரலாற்றுப் பிழையை வெற்றிமாறன் அவர்கள் செய்துள்ளார்.

தோழர் தமிழரசன் (TA)மற்றும் புலவர் அவர்களுடைய போராட்டத்திற்கும், வனப்பகுதிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பழங்குடிகளோடு அவர்கள் இணைந்து போராடவில்லை.
அப்படி இருக்கும்போது படத்தில் வனப்பகுதியும் பழங்குடிகளும் காட்டப்படுவது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை.

சோளகர் தொட்டி நாவலில் இருந்த கதையின் கருவைக் களவாடி இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை உண்மை ,

புலவர் காலகட்டத்தில் எந்த விதமான சித்திரவதை முகாமோ அல்லது அப்படியான ஒரு அமைப்போ இல்லை. வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு பிறகு தான் இந்த மாதிரியான சித்திரவதை முகாம்கள் உருவாக்கப்பட்டது .

One More Controversy on Vetri Maran Viduthalai Film

வீரப்பன் வழக்கு விசாரணை சம்பந்தமான ஆட்களுக்கு மட்டுமே தெரிந்த work Shop என்ற சொல் ..... சோளகர் தொட்டி நாவலில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நண்பர் சூரி நடித்துள்ள கதாபாத்திரம் கூட சோளகர் தொட்டியில் கர்நாடகா சித்திரவதை முகாமான மாதேஸ்வர மலை முகாமில் இருந்த ஒரு காவலரின் பாத்திரத்தை தழுவித்தான் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நாவலாசிரியரிடம் (தோழர் பாலமுருகனிடம்)ஒரு வார்த்தை கூட கலந்து கொள்ளாமல், அனுமதி கேட்காமல் கற்பனைக் கதை என்ற பெயரில் கதைத் திருட்டை தமிழ் சினிமாவில் மட்டும்தான் செய்ய முடியும்.

எழுத்தாளனை மதிக்காத கலை, கலையாக எப்படி இருக்க முடியும்?எப்படி இவருக்கு கற்பனை உதிக்கிறது? பழங்குடிகளை காவல்துறை சித்திரவதை செய்ததையும் workshop என்ற சொல்லும், வனம் சார்ந்த வாழ்வியலும் எங்கிருந்து இவருக்கு கற்பனையாக உதித்தது ? ஒரு நூலில் இருந்து ஒரு செய்தியை படத்தில் பயன்படுத்தப்படும் போது அந்த நூலுக்கு சொந்தக்காரரான அந்த நாவலின் ஆசிரியரான தோழர் பாலமுருகன் அவர்களிடம் குறைந்தபட்சம் மரியாதை நிமித்தமாக கலந்து ஆலோசத்திருக்க வேண்டும். இதுதான் வெற்றிமாறன் போன்ற ஆளுமைகளுக்கு அழகு. இந்நாகரிகம் கூட கடைபிடிக்க முடியாத ஒரு கலைஞன் எப்படி கலைஞனாக இருக்க முடியும் என்பது எனது கேள்வி ?

இப்படி இருக்க சோளகர் தொட்டி நாவலில் இருந்த தகவலையும், முந்திரிக்காட்டு தகவலையும் இணைத்து தான் ஒரு கற்பனையாக கதை எழுதி விட்டேன் என்று சொல்வது மிக அபத்தமானது. வரலாற்று ரீதியாக தவறான செய்திகளை இந்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது இந்த இனத்திற்கும் நீங்கள் சார்ந்து இருக்கின்ற கலைத்துறைக்கும் நீங்கள் இழைக்கும் மிக பெரிய அநீதியாக நான் பார்க்கிறேன்.

கலைஞனுக்கு நேர்மைதான் முக்கியம் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களே...

- அந்தியூர் அன்புராஜ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+