"ஒரே நாடு ஒரே தேர்தல்" ஏன் பயப்பட வேண்டும்.. திமுகவை சீண்டிய ஜெயக்குமார்!
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் திமுக அச்சப்படுவதால் தான் எதிர்க்கிறார்கள் என்றும் இல்லையெனில் ஏன் தேர்தலை கண்டு பயப்பட வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே அவ்வப்போது பேசி வருகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இதுகுறித்த பேச்சு எழுந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் இந்த சூழலில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. குறிப்பாக மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே பாஜக அரசு இதுபோன்ற ஒரு தகவலை கிளப்பி விடுவதாகவும் பரவலாக பேச்சு அடிபடாமல் இல்லை. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை வரவேற்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் திமுக அச்சப்படுவதால் தான் எதிர்க்கிறார்கள் என்றும் இல்லையெனில் ஏன் தேர்தலை கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:- எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆகியினும் அமைச்சர் உதயநிதி பேசியிருப்பதை விரும்ப மாட்டார்கள்..

நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை திசை திருப்பவே இப்படி பேசியிருக்கிறார். நாட்டில் பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை திசை திருப்பத்தான் இப்படி ஒரு முயற்சி.. தேர்தலை கண்டு ஏன் பயப்பட வேண்டும். தைரியமாக சொல்ல வேண்டியது தானே.. எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துங்கள்... நாங்கள் சந்திக்கிறோம்.. எங்க ஆட்சி தான் வரும் என்று.. உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா?.. ஆனால் நாங்கள் சொல்கிறோம்.. எப்போது வேண்டுமானாலும்.. ஏன் நாளைக்கே தேர்தல் வைத்தால் கூட நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications