இனி 3 குரங்கு கிடையாது மக்களே.. 4 குரங்கு.. இதை பாருங்க புரியும்!
மிகவும் பிரபலமான மூன்று ஞான குரங்குகள் ஓவியத்தில் தற்போது புதிதாக இன்னொரு குரங்கு சேர்ந்து இருக்கிறது மக்களே!
Recommended Video

சென்னை: மிகவும் பிரபலமான மூன்று ஞான குரங்குகள் ஓவியத்தில் தற்போது புதிதாக இன்னொரு குரங்கு சேர்ந்து இருக்கிறது மக்களே!
உலகம் முழுக்க இந்த மூன்று குரங்குகள் மிகவும் பிரபலம். ஆங்கிலத்தில் ''திரி வைஸ் மங்கீஸ்'' என்று அழைக்கப்படும் இதை தமிழில் ''நல்ல மூன்று குரங்குகள்'' அல்லது "மூன்று ஞான குரங்குகள்"என்று கூறலாம்.
பல நாடுகளில் பிரபலமான இந்த குரங்குகள் இந்தியாவிலும் பெரும் வைரலான ஒன்றுதான். ஆனால் இதன் பூர்வீகமோ ஜப்பான் ஆகும். இது 17ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அத்தனை பழைய பாரம்பரியம் கொண்டது இது.

17ம் நூற்றாண்டில் ஜப்பானில் அமைக்கப்பட்ட டோஸ்க்கோ கோ என்ற ஜப்பான் கோவிலில் இந்த மூன்று குரங்குகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டது. இதில் ஒரு குரங்கு கண்ணை மூடி இருக்கும். ஒரு குரங்கு வாயை மூடி இருக்கும், ஒரு குரங்கு காதை மூடி இருக்கும்.
இதன் அர்த்தம் கெட்டதை பார்க்க கூடாது, கெட்டதை பேச கூடாது, கெட்டதை கேட்க கூடாது என்பதாகும். இந்த நிலையில் தற்கால நெட்டிசன்கள் இதற்கு புது வடிவம் கொடுத்து இருக்கிறார்கள்.
மூன்றாக இருந்த குரங்கில் புதிய குரங்கு ஒன்றை சேர்த்து இருக்கிறார்கள். இந்த புதிய குரங்கு முழுக்க முழுக்க நம்மை போலவே இருக்கும் குரங்கு ஆகும். இந்த குரங்கு கையில் ஒரு செல்போனை வைத்து இருக்கிறது. இந்த புதிய குரங்கிற்கான விளக்கத்தையும் நெட்டிசன்கள் அளித்துள்ளனர்.
இந்த 4வது குரங்கு கெட்டதை பார்க்காது, கெட்டதை கேட்காது, கெட்டதை பேசாது. அதாவது முதல் மூன்று குரங்கின் வேலையையும் போன் பயன்படுத்திக் கொண்டே இது தனி ஆளாக செய்துவிடும் என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள். இப்போது இருக்கும் முக்கால்வாசி மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள், போன் நோண்டிக் கொண்டு எதையும் கவனிக்காமல் இருக்கிறார்கள் என்று கிண்டல் செய்துள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படி போன் நோண்டுபவர்கள், கெட்டதை மட்டுமில்லாமல் நல்லதையும் கவனிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications