சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையை அதிர வைத்த ஏ.டி.எம் கொள்ளை.. ஒருவர் சிக்கினார்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் திருடியதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் கடந்த வாரங்களாக நூதன முறையில் கொள்ளையடித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல் கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்

சென்னை வேளச்சேரி, விஜயநகர் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎமில் கடந்த 18 மற்றும் 19ம் தேதி பணமெடுக்கும் மெஷினில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டிய நிலையில், 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

பகீர் திருட்டு

பகீர் திருட்டு

இது குறித்து மேலாளர் சென்னை போலீசில் புகார் கொடுத்தனர். இதேபோல் தரமணி , எஸ்ஆர்பி டூல்ஸ் உள்ளிட்ட வங்கிகளிலும் வங்கி ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் பணம் மாயமானது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் ஒரே டெபிட் கார்டை பயன்படுத்தி வடமாநிலத்தை சேர்ந்த சிலர் சுமார் 50 லட்சத்திற்கும் மேலாக கொள்ளையடித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹரியானா தப்பிச் சென்றனர்

ஹரியானா தப்பிச் சென்றனர்

முதலில் சென்னை போலீசார் விசாரித்த இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. கேஸ் டெபாசிட் மிஷனுக்கே தெரியாமல் மிக நுட்பமாக இந்த கொள்ளை நடந்துள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினார்கள். பணத்தை திருடிய கும்பல் ஹரியானாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

ஒருவர் கைது

ஒருவர் கைது

இதனை தொடர்ந்து தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் உடனடியாக ஹரியானா சென்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அமிர் அர்ஷ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 ½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட அமிர் அர்ஷிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

திட்டமிட்டு கொள்ளை

திட்டமிட்டு கொள்ளை

அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இந்த கும்பல் சென்னையில் 15.6.2021 முதல் 18.6.2021 வரை 14 இடங்களில் SBI ATMகளில் சுமார் ரூ.45 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் 5 பேர் குழுக்களாக இருந்துள்ளனர். சென்னையில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு ஏடிஎம் மையங்களில் பணத்தை திருடியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

English summary
One person has been arrested for stealing millions from SBI ATMs in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X