60 பேருக்கு ஒரு டாய்லெட்.. விலங்குகளுக்குரிய வசதிகளை கூட புழல் கைதிகளுக்கு தரக்கூடாதா? ஹைகோர்ட்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் புழல் சிறைக் கைதிகளுக்கு செய்து கொடுக்கப்படும் வசதிகள் குறித்து நேற்றைய வழக்கு விசாரணையில் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியது. 60 பேருக்கு ஒரு கழிவறை என்பது எப்படி நியாயமாக இருக்கும்? வண்டலூர் மிருகக்காட்சியில் கூட விலங்குகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வசதி மனிதர்களுக்கு செய்து கொடுக்கக்கூடாதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சுஜாதா என்பவர சிறை கைதிகளுக்கு வசதிகள் செய்து தருவது குறித்து வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், " என் கணவர் விக்னேஷ்வர் பெருமாள் ஒரு வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். புழல் சிறையில் 2 ஆயிரம் கைதிகள் மட்டுமே அடைக்க முடியும். ஆனால், அங்கு 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

60 கைதிகளுக்கு ஒரு கழிவறை என்று இருக்கிறது. இதனால் கைதிகளுக்கு உடல் நலத்தில் குறைபாடு ஏற்படுகிறது. சென்னை புழல் சிறையில் 6 கைதிகளுக்கு ஒரு வார்டர் இருக்க வேண்டும். ஆனால், அங்கு இப்போது 231 வார்டர்கள்தான் இருக்கிறார்கள். எனவே, சிறையில் கைதிகளுக்கு வசதிகள் செய்துகொடுக்க தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று சுஜாதா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, இந்த வழக்கை சிறையில் உள்ள கைதிகள் யாரும் தாக்கல் செய்யவில்லை. கைதியின் மனைவி தாக்கல் செய்துள்ளார் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''சிறையில் இருக்கும் கைதிகள் இதுபோல வழக்கு தொடர்ந்தால், சிறை அதிகாரிகள் என்ன செய்வார்கள்? இதுபோல சிறை நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும்போது, அந்த கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 60 பேருக்கு ஒரு கழிவறை என்பது எப்படி நியாயமாக இருக்கும்? வண்டலூர் மிருகக்காட்சியில் கூட விலங்குகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வசதி மனிதர்களுக்கு செய்து கொடுக்கக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் என்பவர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, சிறை கைதிகளுக்கு வசதிகள் செய்து தரக்கோரிய இந்த மனுவுக்கு, தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications