1 ஓட்டுல மொத்தமா மாறிப்போச்சு.. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் MLA ஆன வேட்பாளர்கள் யார் யார்?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவிய நிலையில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பலர் வெற்றி பெற்றுள்ளனர். மிகப்பெரிய அதிர்ச்சியாக, திமுக அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். கடைசி சுற்றில் அவர் தவெக வேட்பாளரிடம் வெற்றியைப் பறிகொடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாகக் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏராளமான வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 7 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.
குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் கேஆர் பெரியகருப்பனை ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றியை ஈட்டியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திமுக சார்பில் பெரிய கருப்பன் போட்டியிட்டு தொடர் வெற்றியைப் பெற்று வந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அவரே களம் இறங்கினார். இத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன், தவெக வேட்பாளராக சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் வேட்பாளராக ரம்யா மோகன் ஆகியோர் போட்டியிட்டனர்.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் கேஆர் பெரியகருப்பனுக்கும் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே கடும் இழுபறி நிலவியது. கடைசிப் பெட்டியை எண்ணும் போது அந்த எந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும் பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பெரியகருப்பனைவிட தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
போளூர் தொகுதியில் தவெக வேட்பாளர் அபிஷேக் 227 வாக்கு வித்தியாசத்திலும், கள்ளக்குறிச்சியில் தவெக வேட்பாளர் அருண் விக்னேஷ் 798 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மணப்பாறை தொகுதியில் தவெக வேட்பாளர் கதிரவன் ஆயிரத்து 426 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கும்பகோணத்தில் தவெக வேட்பாளர் வினோத் 679 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கம்பம் தொகுதியில் ஜெகன்நாத் மிஸ்ரா 751 வாக்கு வித்தியாசத்திலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரவணன் ஆயிரத்து 186 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
வேப்பனஹள்ளியில் திமுக வேட்பாளர் சீனிவாசன் 138 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரன் 579 வாக்கு வித்தியாசத்திலும், கோவில்பட்டி திமுக வேட்பாளர் கருணாநிதி 843 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருக்கோவிலூரில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி 285 வாக்கு வித்தியாசத்திலும், பரமத்தி வேலூர் அதிமுக வேட்பாளர் சேகர் 308 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளர் சிவக்குமார் 910 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திண்டிவனம் விசிக வேட்பாளர் வன்னிஅரசு 734 வாக்கு வித்தியாசத்திலும், உதகை பாஜக வேட்பாளர் போஜராஜன் 976 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு












Click it and Unblock the Notifications