Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Oneindia poll: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? எகிறி அடித்த எடப்பாடி! 2ஆம் இடத்துக்கு வந்த விஜய்! அப்போ ஸ்டாலின்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி 'ஒன்இந்தியா தமிழ்; சார்பில் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. '2026இல் இவர்தான் முதல்வர் என நீங்கள் நினைக்கும் தலைவர் யார்?" என்ற கேள்வியோடு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி முதல் இடம் பிடித்துள்ளார். விஜய் இரண்டாவது இடத்தையும், திமுக தலைவர் ஸ்டாலின் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறார். ஏறக்குறைய 82 ஆயிரம் பேர் இந்த வாக்கெடுப்பை பார்வையிட்ட நிலையில் 29,947 பேர் வாக்களித்து இருந்தனர். அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை அனைவரின் கவனமும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கியே இருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், புதிய வரவான தமிழக வெற்றி கழகம் என அனைவருமே தேர்தல் பணிகளை துவக்கிவிட்டனர்.

பொதுமக்கள் பார்வையிலும் 2026 சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கிடையே மக்கள் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளும் வகையில் 'ஒன் இந்தியா தமிழ்' தொடர்ந்து பல்வேறு வாக்கெடுப்புகளை நடத்தி வருகிறது.

edappadi palaniswami mk stalin vijay

தமிழக அரசியல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட "நாளைக்கே தமிழகத்தில் தேர்தல் என்றால் உங்கள் வாக்கு யாருக்கு?" என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பு பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் என மூன்று தரப்பு மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களை மேற்கொள்ளப்பட்டது. அதில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு 20,000க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

ஒன்இந்தியா வாக்கெடுப்பு

அரசியல் சமூகம் சார்ந்த விவாதங்கள் நடக்கும் ட்விட்டரில் இதற்கு ஏகபோக வரவேற்பு இருந்தது. அரசியல் விவாதம் நடக்கும் டுவிட்டரில் திமுக முதலிடத்தையும், நடுத்தர வயதினர் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக்கிலும் திமுக முதல் இடத்தை பெற்றிருந்தது. ஆனால் இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் விஜய்க்கு தான் அதிக வரவேற்பு இருந்ததை பார்க்க முடிந்தது.

அடுத்த முதல்வர் யார்?

இந்த நிலையில் "2026ல் இவர்தான் முதல்வர் என நீங்கள் நினைக்கும் அரசியல் தலைவர் யார்?" என 'ஒன்இந்தியா தமிழ்' வாக்கெடுப்பு நடத்தி இருந்தது. இதில் எக்ஸ் பக்கத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை சுமார் 82,000 பேர் பார்வையிட்டுள்ளதோடு 29 ஆயிரத்து 947 பேர் வாக்களித்துள்ளனர். இந்த முடிவுகள் தான் சற்று ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த வாக்கெடுப்பில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு இருந்த நிலையில், முதல்வர் யார்? என்ற வாக்கெடுப்பில் முதல்வர் ஸ்டாலின் பின்தங்கி உள்ளார்.

எடப்பாடி முதலிடம்

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலிடத்தை பிடித்து இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரண்டாவது இடத்தையும், திமுக தலைவர் ஸ்டாலின் மூன்றாவது இடத்தையும், பிடித்திருக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நான்காவது இடத்தை பெற்று இருக்கிறார்.

விஜய் இரண்டாம் இடம்

முன்னரே குறிப்பிட்டது போல இந்த வாக்கெடுப்பில் 29 ஆயிரத்து 947 பேர் பங்கெடுத்து தங்கள் வாக்கை செலுத்தி இருந்தன. அதில் 40 சதவீதம் பேர், அதாவது 11 ஆயிரத்து 978 பேர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதல்வர் என கருதுகின்றனர். அடுத்ததாக 34 சதவீதம் பேர் அதாவது 10,181 பேர் தவெக தலைவர் விஜய் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கருத்து கூறி இருக்கிறார்கள். திமுக தலைவரும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என 24 சதவீதம் பேர் அதாவது 7,187 பேர் வாக்கு செலுத்தி இருக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என வெறும் 898 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது மொத்த வாக்குகளில் 3 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் போக்கு

வழக்கமாக எக்ஸில் திமுகவுக்கு எப்போதுமே ஆதரவு அதிகமாகவே இருக்கும். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கணக்கெடுப்பில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதைவிட பெரிய ஆச்சரியம் திமுக தலைவர் ஸ்டாலின் மூன்றாவது இடத்திலும், விஜய் இரண்டாவது இடத்திலும் இருப்பதுதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+