Oneindia Poll: DMK ஆதரவாளர்கள் மட்டும் சொல்லுங்க, காங்., கூட இருக்கனுமா? உடன்பிறப்புக்களின் பதில்
சென்னை: சமீப காலமாக திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில், விரிசல்கள் அதிகரித்திருந்தன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடங்கி, ஜனநாயகன் திரைப்படத்திற்கு வரிசை நின்று ஆதரவு தெரிவித்தது வரை, கதர்களின் செயல்பாடுகள், உடன்பிறப்புக்களின் மத்தியில் பெரிய அளவில் திருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஒன் இந்தியா தமிழ் சார்பில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இதற்கு வந்துள்ள பதில்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
காங்கிரஸ் பஞ்சாயத்து, பெரும் பஞ்சாயத்தாக வெடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கதர்களின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகத்தான் போய்க்கொண்டிருக்கிறதோ? என்று உடன் பிறப்புக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காங்கிரஸ் vs திமுக
பீகார் தேர்தலில் நாங்க யாருன்னு காட்டுறோம்.. அதை வச்சு.. தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் பேரத்தை தொடங்குறோம் என்று கதர் தலைகள் பேசி வந்தனர். ஆனால், பீகார் தேர்தலில் காங்கிரஸ் மல்லாக்க படுத்துவிட்டது. எனவே, தமிழகத்தில் சீட் பேரத்தில் கட்சி நிர்வாகிகளால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்த சலசலப்புகளுக்கு நடுவில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கதர் தலைகள் பேச தொடங்கிவிட்டனர்.
அதெப்படிங்க? தமிழகத்தில் இதற்கு முன்னர் இப்படி கொடுத்ததே கிடையாது.. திடீர்னு ஆட்சியில பங்கு, அதிகாரத்துல பங்கு என கேட்பதெல்லாம் ரொம்பவும் ஓவர் என உடன்பிறப்புகள் கொதித்தனர்.
விஜய்யும் காங்கிரஸும்
காங்கிரஸ் இப்படி பேசியதற்கு காரணம் இருக்கிறது. காங்கிரஸ் தோற்கிறதோ, ஜெயிக்கிறதோ.. ஆனால், கூடுதல் எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என்பது, தலைமையின் உத்தரவு. எனவே, அதை அப்படியே தமிழக அரசியலிலும் பாலோ செய்ய, இங்குள்ள தலைவர்கள் முயற்சித்துள்ளார்கள். இந்த தருணத்தில்தான், விஜய் தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இதை காங்கிரஸ் தலைவர்கள் எதிரொலிக்க உரசல்கள் அதிகரித்தன.
ஜனநாயகனுக்கு ஆதரவு
இந்த உரசல்களை மேலும் சூடுபிடிக்க வைத்த விஷயம்தான் ஜனநாயகன் ஆதரவு. கேட்கிற சீட்டை கொடுக்க வேண்டும் என்று, திமுகவிடம் காங்கிரஸ் முரண்டு பிடிக்க.. கொடுக்குற சீட்டை வாங்கிக்கோங்க என திமுக சொல்ல.. கியரை மாற்றி வேறு ரூட்டில் இறங்கியது காங்கிரஸ். அதுவரை விஜய்யிடம் ஜாடை மாடையாக பேசிக்கொண்டிருந்த கதர் தலைகள், ஜனநாயகன் விஷயத்தை நேரடியாகவே கையில் எடுத்து விஜய்க்கு வரிசைக்கட்டி ஆதரவு தெரிவித்தனர்.
திமுகவினர் சொல்வது என்ன?
ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கவில்லை எனில், சென்சார் போர்டு என்கிற அமைப்பே தேவையில்லை என்று பேச தொடங்கினர். ஆட்டம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது என்று, உடன் பிறப்புக்கள் வெறுமென வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில்தான் ஒன்இந்தியா தமிழ், Poll போட்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தது. "திமுக ஆதரவாளர்கள் மட்டும் சொல்லுங்க, காங்கிரஸ் உங்க கூட இருக்கனுமா?" என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பெரும்பாலானோர் வேண்டாம் என்றே பதிலளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications