மொத்தமாக முடித்து விடும் விஜய்! தவெக வருகையால் யாருக்கு நல்லது! மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தால் தற்போது தமிழகத்தில் களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளின் (திமுக, அதிமுக, பாஜக) யாருக்கு நல்லது என "ஒன்இந்தியா தமிழ்" வாக்கெடுப்பு நடத்தியது. இரண்டே நாளில் சுமார் 15 ஆயிரம் பேர் வாக்களித்த நிலையில் மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பிப்ரவரி மாதமே அறிவித்த நிலையில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது. விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.

4 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களை நேரில் சந்தித்து கள அரசியல் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது மாவட்ட நிர்வாகிகள் தவிர்த்து மாநகரம், பேரூராட்சி, ஒன்றியம் வரையிலான நிர்வாகிகள் நியமனம் நடைபெற இருக்கிறது. மேலும் 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யவும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருக்க தேர்தல் வியூக நிபுணர்களுடனும் விஜய் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கட்சி ஆரம்பித்த போது பாஜக, திமுக தான் தனது எதிரி என கூறிய விஜய் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பாமக, தேமுதிக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் விஜய் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு நல்லது என "ஒன்இந்தியா தமிழ்" வெப்சைட்டில் ஓபன் வாக்கெடுப்பு நடத்தியது. யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மொத்தம் 14 ஆயிரத்து 698 வாக்குகள் பதிவான நிலையில் விஜய் கட்சி வருகையால் யாருக்கும் நல்லது இல்லை என 6886 பேர் கூறி உள்ளனர். இது மொத்த வாக்கு பதிவில் 46.85 சதவீதம் ஆகும்.

திமுகவுக்கு நல்லது என 28.3% பேர் வாக்களித்திருக்கிறார்கள். அதாவது 4160 பேர் திமுகவுக்கு நல்லது எனக் கூறி இருக்கிறார்கள். எதிர்ப்பு வாக்குகள் பிரிவது திமுகவுக்கு நல்லது என்பது இவர்கள் கருத்தாக இருக்கலாம். அதிமுகவுக்கு நல்லது என 2131 பேர் வாக்களித்துள்ளனர். இது 14.5% ஆகும். இதே போல பாஜகவுக்கு நல்லது என 10.35 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். இது 1521 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இரு விஷயங்கள் உள்ளன. அதிகம் பேர், யாருக்குமே நல்லது இல்லை என்பதன் மூலம் இந்த கட்சியே தேவையில்லை என்ற எண்ணத்தில் நமது வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது வேறு கட்சிகளுக்கு நல்லது இல்லை, ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நல்லது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications