சர்ருன்னு ஏறுதே.. சதம் அடிக்க போகுது.. பொதுமக்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் பெரிய வெங்காயம்!
சென்னை: வெங்காயம் விலை சைலண்டாக நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம் இன்று 75 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை உயர்வு வாட்டி வதைத்து ஓய்ந்த நிலையில் தற்போது வெங்காய விலை உயர்வு மக்களுக்கு பெரும் சிரமமாக வந்து சேர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65க்கு விற்பனையாகிறது. தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.80-க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் இன்று காலை நிலவரப்படி மொத்த விற்பனையில் 1 கிலோ வெங்காயம் ரூ.70க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் பெரிய வெங்காய விலை சதம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்பேடு சின்ன வெங்காயம், முதல் ரகம் கடந்த வாரம் 60 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 80 முதல் 90 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம், சின்ன வெங்காயத்தின் விலை 60 ரூபாய் அதிகரித்து, 120 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம், தக்காளி விலை மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த 10 நாட்களை ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் வரை வெங்காயம் ஒரு கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்டது. இந்த நிலையில் வெங்காயத்தின் வரத்து குறைவால் தற்போது விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
அக்டோபரில் சாகுபடிக்கு வந்திருக்க வேண்டிய வெங்காயம், சில இடங்களில் பருவமழை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகிறது. பருவம் தள்ளி விதைக்கப்பட்டதால் இப்போது சந்தைக்கு வந்திருக்க வேண்டிய வெங்காயம் இன்னும் சந்தைக்கு வரவில்லை. இதனால், வெங்காயம் விலை அதிகரித்து வருவதாகவும், அடுத்தடுத்த வாரங்களில் வெங்காயம் விலை குறையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications