கோயம்பேட்டில் தலைவலி.. சென்னையில் இறங்காமல் எகிறி அடிக்கும் வெங்காயம் விலை.. மகாராஷ்டிரா தேர்தல் வேற
சென்னை: வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு, கனமழை, தேவை அதிகரிப்பு, தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், வெங்காய வரத்தில் மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?
கடந்த சில மாதங்களாகவே, மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது.. இதனால், விலையும் உயர்ந்து காணப்படுகிறது.. இதில் வெங்காயம் விலை அதிகரித்தபடியே உள்ளது.

நம் நாட்டை பொறுத்தவரை, வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 30.41 சதவீதம் மகாராஷ்டிராவில்தான் விளைகிறது.
நாசிக் நிலவரம்: இதற்கு பிறகு கர்நாடகாவில் 15.51 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 13.66 சதவீதமும் விளைகின்றன. இந்த லிஸ்ட்டில் தமிழ்நாடு 13 வது இடத்தில் உள்ளது.. அதாவது, வெறும் 1.65 சதவீதம் மட்டுமே நம்முடைய மாநிலத்தில் விளைச்சலாகிறது. அதனால்தான், வெங்காய தேவைக்கு மகாராஷ்டிராவையே நாம் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. மகாராஷ்டிராவின் நாசிக் சந்தை நிலவரத்தை வைத்தே, பெரிய வெங்காயம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளதால், தொழிலாளர்கள் பலர் பிரச்சாரத்துக்கு சென்றுள்ளார்களாம். இதனால், வழக்கமான தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மஹாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் குறைவாக உள்ளதுடன், கையிருப்பில் உள்ள வெங்காயத்தை மட்டுமே பிற மாநிலங்களுக்கு அனுப்பும் சூழல் உள்ளதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
தட்டுப்பாடு: ஆனால், இதற்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.. காரணம், சட்டசபை தேர்தல் அங்கு நெருங்கிவிட்டதால், வெங்காயத்தை வெளி மாநிலங்களுக்கு அனுப்பினால், மாநிலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இதனால், விலையும் திடீரென உயரக்கூடும் என்பதால், தேர்தலில் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளுங்கட்சிகள் கணக்கு போடுகின்றதாம்.
இதையடுத்தே, வெளி மாநிலங்களுக்கு வெங்காயம் எடுத்து செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அங்கிருந்து தமிழகத்திற்கு வெங்காயம் வருவதும் குறைந்துள்ளது. மகாராஷ்டிராவிலிருந்து வெங்காய வரத்து குறைந்துள்ளதால், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மட்டுமே வெங்காயம் வருகிறது. ஆனால், அவை போதுமான அளவில் இல்லை. இதன்காரணமாகவே வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
எப்போது குறையும்: அந்தவகையில், சென்னை கோயம்பேடு சந்தையில், முதல்தர பெரிய வெங்காயம், கிலோ, 70 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது... இரண்டாம் தர வெங்காயம், 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகே, வெளிச்சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரிக்கும் என்றும், அதற்கு பிறகே விலை கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே வெங்காயம் விலையானது வரும் நாட்களில் குறையும் என்று மத்திய அரசின் நுகர்வோர் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. மீண்டும் காரிஃப் பயிர் வரத்து தொடங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக இனிவரும் நாட்களில் வெங்காய விலை குறையும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கு பிறகே விலையில் ஓரளவு மாற்றம் தென்படலாம் என்றும் வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் புதிய பயிரின் வருகையும் தாமதமாகியுள்ளதால்தான், இந்த விலை உயர்வு என்றும் வியாபாரிகள் கூறுகிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications