ரூ.1000 தந்தால் ரூ.10000.. இன்ஸ்டாவில் நடந்த பெரிய மோசடி.. சிக்கிக்கொண்ட அமலா ஷாஜி.. நடந்தது என்ன?
சென்னை: ஆன்லைன் மணி டபுளிங் மூலம் இரண்டு மடங்கு வருமானம் ஈட்டலாம் என்று கூறி இன்ஸ்டாகிராம் வழியாக செய்யப்பட்ட மோசடி ஒன்று அம்பலம் ஆகி உள்ளது. இன்ஸ்ட்டா பிரபலங்கள் அமலா ஷாஜி, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் மீது இந்த விவகாரத்தில் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இப்போதெல்லாம் இணையத்தில் டிரெண்டாக.. மக்கள் இடையே பிரபலம் அடைய வயசு ஒரு தடையே இல்லை என்றாகிவிட்டது. முன்பெல்லாம் திரையில் தெரிய வேண்டும் என்றாலே கோடம்பாக்கத்திலும், வடபழனி ஏவிஎம் வாசலிலும் தவமாக கிடக்க வேண்டும்.

ஆனால் இப்போதோ இன்ஸ்ட்டா ரீல்ஸ், பேஸ்புக் மூலமே பலர் இணையத்தில் பிரபலமாகி விடுகிறார்கள். இதில் சிலர் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துவிட்டனர்.
அமலா ஷாஜி: ஜிபி முத்து தொடங்கி காத்து கருப்பு கலை வரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆனது இந்த இணையம் மூலம்தான். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் "பயங்கர" பைக் ரேசர் டிடிஎப் வாசன் கூட யூ டியூப் மூலம் பிரபலம் அடைந்தவர்தான். முக்கியமாக இதில் 2கே கிட்ஸ்களுக்குத்தான் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இணையத்தில் ஹிட் அடித்து இருக்கும் 2கே கிட்தான் அமலா ஷாஜி!
அசப்பில் அமலா பால் .. மினிமைஸ் செய்தால் மீரா ஜாஸ்மின்.. சைடு வாக்கில் சமந்தா.. நடந்து வந்தா நயன்தாரா என்று 2கே கிட்ஸ்கள் இடையே பிரபலத்தின் உச்சத்தில் இருப்பவர்தான் இந்த அமலா ஷாஜி! அப்படி இவங்க என்ன பாஸ் பண்ணிட்டாங்க என்று கேட்டால்.. பெரிதாக எதுவும் இல்லை. சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் போடுவதுதான் இவரின் வேலை. ஆனால் அதன் மூலமே இவர் பல மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்று இருக்கிறார்.
அமலா ஷாஜி மோசடி: இந்த நிலையில்தான் அமலா ஷாஜி கணக்கு மூலம் பெரிய அளவில் பண மோசடி ஒன்று நடந்து உள்ளது. அதன்படி சமீபத்தில் அமலா ஷாஜி தனது வீடியோ ப்ரோமோஷன் ஒன்றில்.. என்னுடைய தோழி அனன்யா போரக்ஸ் ஒரு டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 1000 முதலீடு செய்தால் 10 மடங்கு லாபம் கிடைக்கும்.
அதாவது 10 ஆயிரம் வரை கூட கிடைக்கும். என்று விளம்பரம் செய்துள்ளார். நானும் இப்படி முதலீடு செய்தேன். எனக்கு பல ஆயிரம் வருமானம் கிடைத்தது. நீங்களும் செய்து பலன் அடையுங்கள் என்று கூறியுள்ளார்.
மோசடி நடந்தது எப்படி?: இதை நம்பி நெட்டிசன்கள் சிலர் அங்கே கொடுக்கப்பட்ட அனன்யா போரக்ஸ் ஐடிக்கு மெசேஜ் செய்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த அனன்யா போரக்ஸ் கணக்கிற்கு மெசேஜ் அனுப்பிய நபர் அது பற்றி விளக்கி உள்ளார். அதன்படி, அந்த கணக்கில் 1000 ரூபாய் பணம் அனுப்பி டிரேடட் செய்ய சொல்லி உள்ளனர். 50 நிமிடத்தில் இதன் லாபத்தை உங்களுக்கு கொடுப்போம் என்றும் கூறியுள்ளனர்.
அதன்படியே 50 நிமிடத்தில் அந்த பணம் 15 ஆயிரம் ரூபாயாக க்ரிப்டோகரன்சி டிரேடிங்கில் மாறி உள்ளது. இதை ஸ்கிரீன் ஷாட் அனுப்பி, இந்த பணத்தை கொடுக்க டெபாசிட் பணமாக டெபாசிட் என்று குறிப்பிட்டு 8999 ரூபாய் அனுப்பி வேண்டும். அதையும் சேர்த்து மொத்தமாக உங்களுக்கு திருப்பி கொடுப்போம் என்று கூறியுள்ளது அனன்யா போரக்ஸ் கணக்கு.
க்ரிப்டோகரன்சி டிரேடிங்: அதை அனுப்பிய பின்.. இல்லை நீங்கள் டெபாசிட் தொகையை கூகுள் பேவில் அனுப்பிய போது அதை டெபாசிட் என்று குறிப்பிடவே இல்லை. அதனால் அது செல்லாது. மீண்டும் அனுப்புங்கள். அதற்குள் உங்கள் பணம் 1.30 லட்சமாக மதிப்பு கூடிவிட்டது. உங்கள் லாபம் அதிகரித்துவிட்டது.
அதனால் நீங்கள் சர்வீஸ் சார்ஜ் 18999 கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை கேட்டு அந்த நபர். எனனிடம் அவ்வளவு பணம் இல்லை என்றதும். சரி 15999 கொடுங்கள் போதும் என்று கூறி அதையும் வாங்கி உள்ளனர். இதையடுத்து இந்தியாவில் க்ரிப்டோகரன்சிக்கு வரி உண்டு. 30 ஆயிரம் வரை வரி விதிக்கப்படும். நீங்கள் 31 ஆயிரம் ரூபாயை இதற்கு அனுப்புங்கள் என்று கூறி உள்ளனர்.
அவ்வளவு தொகையை அனுப்ப முடியாது.. நீங்கள் நான் இதுவரை கொடுத்த 26 ஆயிரம் ரூபாயை என்னிடம் திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கும் அவர்கள் ஓகே.. உங்களுக்கு ரீபண்ட் செய்துவிட்டோம்.. 15-30 நாட்களில் உங்கள் கணக்கிற்கு பணம் வரும் என்று கூறி உள்ளனர்.
தொடர் மோசடி: இதே முறையில் மொத்தமாக இவர்கள் அனன்யா போரக்ஸ் கணக்கை மூடி உள்ளனர். அந்த கணக்கில் பலர் இப்படி பணம் கொடுத்து ஏமாந்து உள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அனன்யா போரக்ஸ் என்ற ஆளே இல்லை.. அவரின் கணக்கு தொடங்கி அவரின் பக்கம் வரை எல்லாமே பொய்யானது என்று கூறப்படுகிறது.
பொய்யான கணக்குகளை தொடங்கி அதன் மூலம் டிரேடிங் செய்து பல கோடி பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி இந்த கணக்கு ஏமாற்றி உள்ளது. இதேபோல் போரக்ஸ் கணக்குகள் பல இன்ஸ்ட்டாவில் உள்ளன. இதில் அமலா ஷாஜிக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும்.. அவர் எதையும் விசாரிக்காமல் விளம்பரம் செய்ததே தவறு. இதுவும் ஒரு வகையில் மோசடிக்கு உடந்தைதான்.
அமலா ஷாஜி மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா மேனன் தொடங்கி பலர் இப்படி விளம்பரத்திற்கு ஏமாந்து உள்ளனர். இதை சரியாக சோதனை செய்து விளம்பரம் செய்து மோசடி செய்யும் கும்பல்களுக்கு எளிமையாக வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications