ஆன்லைனிலேயே "பட்டா" வாங்க முடியுமா? வீட்டிலிருந்தபடியே பட்டாவை ஈஸியா மாற்றலாம்.. சூப்பர் ஏற்பாடு
சென்னை: அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் பல துறைகளின் சேவைகள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில் பட்டா மாறுதலும் ஆன்லைனில் ஆரம்பமாகி உள்ளது. இதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா?
பட்டா என்றால் என்ன தெரியுமா? ஒருவரது தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணம் பெயர்தான் பட்டா.. ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும்.

வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாகும்.. இந்த ஆவணத்தில், ஓனரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பத்திரமாகும்.
தீர்வை விவரங்கள்: அதாவது சம்பந்தப்பட்ட நிலத்துக்கு அதிகாரப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமாகவும் உரிமையை காட்டும் ஆவணமாகும்.. அரசு இந்த ஆவணத்தை வழங்கும்.. இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் ஓனரின் பெயர், சர்வே நம்பர், உட்பிரிவு, நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் இப்படி அனைத்து விவரங்களையும் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆவணங்கள்: அதாவது, ஒரு அசையா சொத்தின் ஓனர் யார் என்பதற்கு வருவாய்த்துறை வழங்கக்கூடிய ஆவணம்தான் இந்த பட்டா.. பட்டாவில் 2 வகை உண்டு.. ஒன்று கூட்டுப் பட்டா, இன்னொன்று தனிப் பட்டா..
ஒருவர் நிலம் வாங்கினால் அவருக்கு தரப்படுவது தனிப்பட்டா என்பார்கள்.. இதை வைத்து, நிலத்திற்கான சர்வே நம்பர், வாங்குபவர் பெயருக்கு மாற்றம் செய்யப்படும். ஆனால், ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஓனர்கள் இருந்தால், அந்த நிலத்திற்கு கூட்டுப்பட்டாவாக வழங்கப்படும்.
அதேபோல, நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்கிறார்கள்.
எனினும், சரியான ஆவணங்கள் அங்கு கொண்டு செல்லாவிட்டால், சில நேரங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய ஒரு நாள் கூட ஆகிவிடுகிறது. அதனால்தான், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின், தொடங்கி வைத்திருக்கிறார்.
https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற வெப்சைட் இதற்காகவே துவங்கப்பட்டுள்ளன.. ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தேவையில்லாமல் அலைய தேவையில்லை... நேரமும் மிச்சமாகும்.. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதலும் உடனடியாக செய்யப்படும். இதில் இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை.. இந்த இணையதளத்தில் எப்படி பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்வது தெரியுமா?
பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள் (ஏதாவது ஒன்று):
கிரையப் பத்திரம்.
செட்டில்மெண்ட் பத்திரம்
பாகப்பிரிவினை பத்திரம்
தானப்பத்திரம்
பரிவர்த்தணை பத்திரம்
விடுதலை பத்திரம்
ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை குடியிருப்பு ஆவணங்கள் (ஏதாவது ஒன்று) ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது, மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை
எப்படி மாற்றுவது: முதலில் www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம். இந்த வெப்சைட்டிற்கு சென்றதுமே, உங்களது பெயர், செல்போன் நம்பர், இ-மெயில் அட்ரஸ் தந்து பதிவு செய்ய வேண்டும்.
பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பிறகு, உங்களது சுயவிவரங்களையும், நிலத்தின் விவரங்களையும் பதிவிட வேண்டும். அதாவது, அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பர் என பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
அடுத்ததாக, சம்பந்தப்பட்ட நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்ற சான்றான, கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, இறுதியாக உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
பட்டா மாறுதல்: இப்போது, உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும்... அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications