டாஸ்மாக்கில் புதிய ரூல்ஸ்.. ரூ.1,000-க்கு மேல் இருந்தால் ஆன்லைன்.. உண்மையில் பலனளிக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகளில் வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் ஒரு விற்பனைக்கான தொகை ரூ.1,000-க்கு மேல் இருந்தால், அந்தத் தொகையை யு.பி.ஐ. அல்லது வங்கி இணைப்புடன் கூடிய விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே பெற வேண்டும். அடுத்தாண்டு (2027) ஜனவரி 1-ந் தேதி முதல், ஒரு விற்பனைக்கான தொகை ரூ.500-க்கு மேல் இருந்தால், இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.ஒவ்வொரு விற்பனைக்கும் வாடிக்கையாளருக்குப் பில் வழங்க வேண்டும். பில் வழங்காமல் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.

TASMAC liquor upi

டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 4,048 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனைத் தொகை ரொக்கமாகவும், யு.பி.ஐ. மற்றும் விற்பனை முனையக் கருவி (கார்டுகள்) மூலமாகவும் பெறப்படுகிறது. இருப்பினும், விற்பனைத் தொகையின் பெரும்பகுதி ரொக்கமாகவே பெறப்படுகிறது.

ரொக்கப் பணத்தைக் கையாள்வதால் கடைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காகப் பணியாளர்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், அவர்களின் பணிச்சுமையும், இடர்ப்பாடுகளும் அதிகரிக்கின்றன. மேலும், ரொக்கப் பரிவர்த்தனையில் கள்ள நோட்டுகள், பணப் பற்றாக்குறை மற்றும் கணக்கு வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மதுபான விற்பனையின்போது அதிகபட்ச சில்லறை விலையைவிட (எம்.ஆர்.பி.) கூடுதல் தொகை வசூலிப்பதாகப் புகார்கள் பெறப்படுகின்றன. இதனைத் தவிர்ப்பதுடன், விற்பனையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மின்னணு பணப்பரிவர்த்தனை முறையைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் ஒரு விற்பனைக்கான தொகை ரூ.1,000-க்கு மேல் இருந்தால், அந்தத் தொகையை யு.பி.ஐ. அல்லது வங்கி இணைப்புடன் கூடிய விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே பெற வேண்டும். அடுத்தாண்டு (2027) ஜனவரி 1-ந் தேதி முதல், ஒரு விற்பனைக்கான தொகை ரூ.500-க்கு மேல் இருந்தால், இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு கடையிலும் வங்கி இணைப்புடன் கூடிய விற்பனை முனையக் கருவி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். கருவியில் பழுது ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பணியாளரைத் தொடர்புகொண்டு சரிசெய்ய வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு விற்பனைக்கும் வாடிக்கையாளருக்குப் பில் வழங்க வேண்டும். பில் வழங்காமல் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. விற்பனைத் தொகையைப் பெற்ற பிறகு, அதற்கான பில்லை வழங்கி, விற்பனை விவரங்களை முறையாகக் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். விற்பனைத் தொகைக்கும், கணக்கில் பதிவு செய்யப்பட்ட தொகைக்கும் இடையே வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடைப் பணியாளர்களின் தனிப்பட்ட யு.பி.ஐ. அல்லது வங்கிக் கணக்குகள் மூலம் விற்பனைத் தொகையைப் பெறக்கூடாது. விற்பனைக்கான பணம் உரிய கடையின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள கருவி அல்லது அங்கீகரிக்கப்பட்ட மின்னணு பணப்பரிவர்த்தனை முறை மூலமாகவே பெறப்பட வேண்டும். அதனை மாவட்ட மேலாளர்கள் கண்காணித்து ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்.

மேலும், கடைகளில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் மின்னணு பணப்பரிவர்த்தனை தொடர்பான அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும். அதில் பணப்பரிவர்த்தனைக்கான வழிமுறைகள் மற்றும் புகார் தெரிவிப்பதற்கான விவரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறையால் டாஸ்மாக் கடைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், பாட்டிலுக்கு கூடுதல் பணம் செலுத்துவது தவிர்க்கப்படும் என்று அரசு நம்புகிறது. ஆனால் உண்மையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கும் ஊழியர்களுக்கு எதிராக கடைக்கு வரும் ஒவ்வொருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகார் அளிக்க தொடங்கினால் தான் திருந்துவார்கள் என்று குடிமகன்கள் கூறுகிறார்கள். அரசு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முடியாவிட்டால் மொத்தமாக மதுவிற்பனையும் அரசு தந்துவிடலாம் என்றும் சிலர் யோசனை தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+