ஆன்லைன் பத்திரப்பதிவு.. பட்டா மாறுதல், EC வரை! நேரில் வருகையில்லா ஆவணப் பதிவில் பெயிரா சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் Presence-less Registration (நேரில் வருகையில்லா ஆவணப் பதிவு) முறையை முழுமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது... பதிவு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய சிரமத்தை குறைக்கும் இந்த புதிய முறையில், சில முக்கிய தொழில்நுட்பக் குறைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பெயிரா வலியுறுத்தியுள்ளது. முதலமைச்சர் முதல் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் வரை அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் என்னென்ன பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன?

தமிழ்நாடு பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ள "Presence-less Registration" (நேரில் வருகையில்லா ஆவணப் பதிவு) முறையை FAIRA எனப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

Online Property Registration

அதேசமயம், இந்த திட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களை விரைந்து களைந்து, திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், பதிவுத்துறை அமைச்சர், பதிவுத்துறை செயலாளர் மற்றும் பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு விரிவான கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

பெயிரா நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி, தலைமையில் இயங்கும், மனை மேம்பாட்டாளர்கள் குழுவின் மாநிலத் தலைவர் எஸ். பாலாஜி, இந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசுத் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

சப்-டிவிஷன் - டிஜிட்டல் முயற்சி

அந்த கடிதத்தில், "Presence-less Registration முறையானது பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்கும் நேரம், பயணச் செலவு மற்றும் நடைமுறைச் சிரமங்களை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள முக்கியமான டிஜிட்டல் நிர்வாக முயற்சியாகும்.

அரசின் இந்த முயற்சியை வரவேற்கும் FAIRA, திட்டத்தின் நோக்கம் சிறப்பாக இருப்பதுடன், நடைமுறையில் ஏற்படும் தொழில்நுட்பத் தடைகளும் விரைவாக சரிசெய்யப்பட்டால் மட்டுமே இதன் முழுமையான பலன் பொதுமக்களை சென்றடையும்" என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் சில கோரிக்கைகளையும் எஸ்.பாலாஜி அந்த கடிதத்தில் எழுப்பியிருக்கிறார்.. "Sub-Division மற்றும் Revenue Records ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தகுதியான வழக்குகளில் Automatic / Integrated Patta Mutation வசதி ஏற்படுத்த வேண்டும். சிறிய பிழை அல்லது தொழில்நுட்ப காரணத்தால் ஆவணம் திருப்பியனுப்பப்பட்டால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அடையாளச் சரிபார்ப்பை பாதுகாப்பாகப் பயன்படுத்தி, மீண்டும் கைரேகை பெறுவதைத் தவிர்த்து Correction & Resubmission வசதி வழங்க வேண்டும்.

கைரேகை சரிபார்ப்பு

புகைப்படம், தனிநபர் விவரங்கள் மற்றும் ஆவணத் தகவல்களில் தேவையான திருத்தங்களை உரிய சரிபார்ப்புடன் மேற்கொள்ளும் வகையில் T.P. Number திருத்த வசதி ஏற்படுத்த வேண்டும். ஆவணத்தைப் பார்வையிடும்போது எழுத்துக்கள் ஒன்றின் மேல் ஒன்று விழுவது போன்ற Text Overlap தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

கைரேகை சரிபார்ப்பில் ஏற்படும் Fingerprint "Service Unavailable" பிரச்சினையைத் தவிர்க்க Server, Backup, Network Connectivity மற்றும் Real-time Monitoring வசதிகளை வலுப்படுத்த வேண்டும். அதேபோல், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பெயர்களும் MOD பதிவுகளுக்கான Database-ல் இடம்பெற வேண்டும் என்பதுடன், எதிர்கால தேவைக்காக "Others" என்ற விருப்பத்தையும் வழங்க வேண்டும்.

ஆன்லைன் பட்டா

இதனுடன், ஆன்லைன் Guideline Value, MODT Partial Release, Office EC - Online EC தகவல் ஒருங்கிணைப்பு, Patta விண்ணப்பங்களின் வெளிப்படையான செயலாக்கம், தெளிவான Error Message, Real-time Application Status Tracking உள்ளிட்ட அம்சங்களிலும் தேவையான மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பதிவு முடிந்த பிறகு ஒரே தகவலை பல்வேறு அரசு அலுவலகங்களில் மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில், தேவையான இடங்களில் பதிவுத்துறை - வருவாய்த்துறை - உள்ளாட்சி அமைப்புகள் - திட்டமிடல் ஆணையங்கள் ஆகியவற்றுக்கிடையே பாதுகாப்பான தரவு ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்" என்றும் எஸ்.பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

பெயிராவின் நோக்கமே வேற

இதனிடையே, "அரசை விமர்சிப்பது அல்ல, திட்டத்தை முழுமைப்படுத்துவதே FAIRA-வின் நோக்கம்" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..

இதுகுறித்து பெயிரா சொல்லும்போது, "Presence-less Registration என்பது பொதுமக்களுக்கு நேரம், பயணம் மற்றும் நடைமுறைச் சிரமங்களை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பான திட்டம். இந்த திட்டத்தின் நோக்கத்தை FAIRA மனதார வரவேற்கிறது.

அதே நேரத்தில், களத்தில் பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களை விரைந்து களைந்தால், இத்திட்டம் இன்னும் சிறப்பாகவும் முழுமையாகவும் செயல்படும்.

எனவே, அரசின் மீது குற்றச்சாட்டாக அல்லாமல், பொதுமக்கள் நலன் கருதி ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளாக இக்கோரிக்கைகளை FAIRA முன்வைத்துள்ளது. முதலமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் இக்கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பதிவு சேவை

"ஒருமுறை பதிவு - மீண்டும் சிரமம் இல்லை" என்ற நோக்கில், Presence-less Registration முறையில் ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைத் தடைகள் அனைத்தும் களையப்பட்டு, தமிழ்நாட்டில் வேகமான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் பொதுமக்களுக்கு எளிமையான டிஜிட்டல் பதிவு சேவை உருவாக வேண்டும் என்பதே FAIRA-வின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+