உயில் ஈஸியா ஆன்லைனில் இனி எழுதலாமே? டிஜிட்டல் உயிலில் இத்தனை நன்மையா? சொத்துக்கள் லிஸ்ட் ரெடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரம்பரியமான உயில்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆன்லைனிலும் உயில் தயாரிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. ஆன்லைனில் உயில் தயாரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? எப்படி ஆன்லைனில் உயில் எழுத முடியும்?

உயில் எழுதி வைத்தால், உயில் எழுதியவரின் விருப்பப்படி அவரது சொத்துக்கள் பிரிக்கப்படும்... சொத்துக்கள் பிரிவினையில் தாவாக்கள், வழக்குகள் ஏற்படாமல் தடுக்க உதவுவதற்காகவும் உயில்கள் உதவுகின்றன.. பின்னாளில் சொத்து விவகாரத்தில் வாரிசுகளுக்கும் எந்த பிரச்சனையும் உருவாகாமல் தடுக்க, உயில்கள் உதவுகின்றன.

online will will documents

அதேபோல, தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே பிறருக்கு உயிலாக எழுதி வைக்கலாம்.. பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியாது, அதை பிரித்து எழுதி வைக்கவும் முடியாது. அந்த பூர்வீக சொத்துக்களை வெறும் அனுபவித்து கொள்ளலாம்.

ஆவணங்கள்: உயில் எழுதுவதற்கு ஆவணங்கள் தேவையில்லை, சாதாரண வெள்ளை பேப்பர் இருந்தாலே போதுமானது.. முறைப்படி உயில் எழுதுவதாக இருந்தால் பேப்பரில் ஸ்டாம்ப் ஒட்டி உயிலை எழுதி 2 பேர் சாட்சி கையெழுத்து போட்டு அதை ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த 2 சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

உயில் எழுதும்போது பேனாவிலும் எழுதலாம். கம்ப்யூட்டரில் டைப் செய்து கொள்ளலாம்.. 18 வயது நிரம்பாத நபருக்கு உயில் எழுதப்பட்டால், அதற்கு கார்டியனாக ஒருவரை நியமிக்க வேண்டும். உயில் எழுதியவர் இறந்துவிட நேர்ந்தால், அந்த உயிலை கோர்ட்டில் மெய்ப்பிக்க வேண்டும். 3 வருடத்துக்குள் உயிலை மெய்ப்பிக்காவிட்டால், தாமதத்துக்கான காரணங்களை கோர்ட்டில் சொல்ல வேண்டியிருக்கும் என்பது விதியாகும்.

நிபுணத்துவம்: ஆனால் ஆன்லைனிலும் உயிலை தயாரிக்கலாம். முஸ்லீம் சமூகத்திற்கு ஷரியத் சட்டங்களில் நிபுணத்துவம் தேவைப்படுவதால், அவர்கள் மட்டும் தனிப்பட்ட மற்றும் சிறப்பு சேவைகளை நாட வேண்டியிருக்கும். மற்றபடி, யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் உயிர் தயாரிக்கலாம்..

பாரம்பரிய முறைகள் மூலம் உயிலை உருவாக்க வேண்டுமானால் நேரம், பணம் அதிகம் செலவிட நேரம், ஆனால், ஆன்லைனில் எளிதாக உயிலை தயாரித்துவிட வேண்டும். இதனால் யாருக்குமே பணத்தை செலவு செய்ய தேவையில்லை. வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. சேவை வழங்குநர் மற்றும் உயிலின் சிக்கலான தன்மையை பொறுத்து ஆன்லைன் உயிலின் விலை மாறுபடும்.

கையெழுத்துகள்: 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் உயிலை புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனிலேயே உயில் தயாரித்தாலும்கூட, இதற்கும் 2 சாட்சிகள் கையெழுத்துகள் மிகவும் முக்கியம்.. ஆன்லைனில் உயில் தயார் செய்வதால், தவறுகளின் அபாயமும் குறைகிறது.. ஆன்லைன் மூலம் எழுதி வைத்த உயிலில் ஏதேனும் பிழைகள் இருந்தாலும், உங்களால் திருத்தி கொள்ள முடியும்..

அதேசமயம், ஆன்லைனில் உயிலை உருவாக்கினால், சில சிக்கல்களும் உள்ளன.. குறிப்பாக, வழக்கறிஞரின் ஆலோசனையை பெற முடியாது. தனிப்பட்ட விருப்பங்களை முழுமையாக இணைக்க முடியாமல் போகலாம்... பெரிய சொத்துக்கள் அல்லது சிக்கலான குடும்ப சூழ்நிலைகள் போன்ற சிலருக்கு ஆன்லைனில் உயில் செய்வது பொருத்தமற்றதாக இருக்கலாம். எனவே, உயிலை தயாரிப்பதற்கு முன்பு தனிநபர்கள் தங்கள் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கருத்தில் கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஆன்லைன் சேவை: அதேபோல, தற்போது அனைத்திலுமே டிஜிட்டல் முறை வந்துவிட்டதால், உயில் தயாரிப்பதற்கு நம்பகமான ஆன்லைன் சேவை எது என்பதை கண்டறிய வேண்டும். அந்த இணையதளங்கள் பாதுகாப்பானதா? மற்றும் HTTPS குறியீடு கொண்ட URL பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் நன்கு ஆராய வேண்டும்.

நம்பகமான வெப்சைட் என்பதை அறிந்தபிறகு, உயில் தயாரிப்பதாக இருந்தால், உயில் எழுதுபவரின் முழுப்பெயர், பிறந்த தேதி, முகவரி, பிற விவரங்களை தந்து பதிவு செய்ய வேண்டும். பிறகு ஆன்லைன் சேவையை பயன்படுத்த பாதுகாப்பான 'login' டீடெயில்களை உருவாக்கி வைத்து கொள்ள வேண்டும். உயிலில் ஏதாவது திருத்தம் செய்யப்பட்டால் அதற்கு இது நிச்சயம் உதவும்.

சொத்துக்கள் விவரம்: பிறகு சொத்து விவரங்களையும், முதலீடுகள், வங்கிக் கணக்குகள் மற்றும் உயில் எழுதுபவரின் மதிப்புமிக்க சொத்துகள் போன்றவற்றையும் தவறில்லாமல் பதிவிட வேண்டும்... ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சொத்துக்களை ஒதுக்கும் வழிகளும், வெப்சைட்களிலேயே தரப்பட்டிருக்கும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+