TN 10th Result: 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 8 பேர் மட்டுமே 100க்கு 100.. பாட வாரியாக தேர்ச்சி விவரம்
சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் (10th public exam Result 2025) தமிழ் பாடத்தில் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆங்கிலம் பாடத்தில் 346 பேரும், கணிதம் பாடத்தில் 1996 பேரும், அறிவியல் பாடத்தில் 10838 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 10256 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பாடங்களில் எத்தனை சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றனர் என்ற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 9 மணி அளவில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியிருந்தார்கள். இதில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம் ஆக உள்ளது.

10ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் அதிகம்
10ம் வகுப்பில் மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்விற்கு வருகை புரியாதவர்கள்: 15,652பேர் ஆகும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
10ம் வகுப்பில் 100க்கு 100 மதிப்பெண்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆங்கிலம் பாடத்தில் 346 பேரும், கணிதம் பாடத்தில் 1996 பேரும், அறிவியல் பாடத்தில் 10838 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 10256 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பாட வாரியாக தேர்ச்சி விவரம்
10ம் வகுப்பில் பாட வாரியாக தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை தமிழ் பாடத்தில் 98.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 99.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் இந்த ஆண்டு 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 97.90 சதவீதம் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 98.49 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எஸ்எம்எஸ் மூலம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10ம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்களது மதிப்பெண்களை www.tnresults.nic.in, dge.tn.gov.in, மற்றும் dge1.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ தளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு காலை 9 மணி முதலே பார்க்க முடியும். இணையதளங்களுடன் சேர்த்து, https://results.digilocker.gov.in மற்றும் SMS சேவையின் மூலமும் மதிப்பெண்கள் பெற முடியும். அதேபோல் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரம் எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications