Optical Illusion: நீங்க ஜீனியசா.. படத்தில் மொத்தம் எத்தனை ‘3’ எண்கள் இருக்கு! 7 செகண்டில் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) புதிர் படத்தில், 1 ல் இருந்து 9 வரையிலான எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செல்போன் கீ போர்டு டைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் 3 என்ற எண் மட்டும் அதிகமாக உள்ளது. இந்த "3" எண்கள் மட்டும் படத்தில் மொத்தம் எத்தனை உள்ளன? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் உங்களுக்கான சேலஞ்ச். 7 செகண்டுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை. கண்களை குழப்பி, மூளைக்கு வேலை வைக்க கூடிய இத்தகைய இல்யூஷன் படங்கள் இணையத்தில் இப்போது அதிகம் டிரெண்டிங் ஆகின்றன.

optical illusion offbeat trend

ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம்

ரீல்ஸ்களை பார்த்து போரடித்துவிட்டாலோ... கொஞ்சம் பயனுள்ள வகையில், பொழுதைப் போக்கும் விதமாக நேரத்தை செலவிட விரும்புவோர் இல்யூஷன் படங்களை விரும்பி பார்க்கிறார்கள். இல்யூஷன் படங்களைப் பொறுத்தவரை, கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கும். ஒருவரின் கவனிப்புத்திறன், சிந்தனை ஆற்றல் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் இந்த இல்யூஷன் படங்கள் அமைந்துள்ளன.

எத்தனை '3' எண்கள் உள்ளன?

இதனால், ஓய்வு நேரத்தில் சவால்மிக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து, அதற்கான விடையை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் மெனக்கெடுக்கின்றனர். விடையை கண்டுபிடித்த பிறகு, தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி, "விடையை கண்டுபிடிக்கிறார்களா? இல்லையா?" என்று சோதித்து பார்க்கிறார்கள். இப்படியாக ஒரு ஜாலியான புதிர் விளையாட்டாகவும், இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் பரவுகின்றன.

சரி, அதெல்லாம் இருக்கட்டும்... இங்கே இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் கொஞ்சம் புதிர்மிக்கது! இங்கே பகிரப்பட்டுள்ள இந்த படத்தில் வரிசையாக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் '3' என்ற எண் மட்டும் அதிகமாக உள்ளது. மொத்தம் எத்தனை '3' என்ற எண்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

7 செகண்ட் தான் டைம்!

வெறும் 7 விநாடிகள் தான் டைம்! அதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்! சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா? படத்தை நன்றாக பாருங்கள்... வரிசையாக மூன்று எண்களை எண்ணிப் பாருங்கள்.

மேலோட்டமாக பார்க்காதீர்கள். எண்களை விட்டு விடுவீர்கள். ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள்... 1, 2, 3... 7 - உங்களுக்கான நேரம் முடிந்தது! விடையை சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்! சரியான விடையை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

சரியான விடை இது தான்

முதல் 10 இடங்களுக்குள் வருபவர்கள் ஜீனியஸ் தான். கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள், கவலைப்பட வேண்டாம். இன்னும் கூடுதலாக 5 விநாடிகள் டைம் எடுத்துக்கோங்க... இப்போது விடையை கண்டுபிடிக்க முயற்சி பண்ணிப் பாருங்கள்...

இப்போது கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். சரியான விடை என்ன என்று தெரியாமல் குழம்பியிருக்கின்றீர்களா.. இங்கே பாருங்கள்.. இது தான் சரியான விடை.. மொத்தம் 12 - '3' என்ற எண்கள் உள்ளன!.. 12 என விடை சொன்னவர்களுக்கு வாழ்த்துக்கள்!..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+