500 பேருந்துகள் இருக்கட்டும்..சென்னையில் இப்போதும் ஒரு தனியார் பஸ் ஓடிக்கொண்டு இருக்கே? எப்படி?
கலைவாணி டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சென்னையில் ஒரே ஒரு தனியார் பேருந்து கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் குறித்த பேச்சுக்கள் தற்போது அதிகரித்து இருக்கும் நிலையில், கலைவாணி டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சென்னையில் ஒரே ஒரு தனியார் பேருந்து கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஒரே ஒரு பேருந்து மட்டும் சென்னை நகரத்திற்குள் ஓடுவதற்கான அனுமதி எப்படி கிடைத்தது என்பது குறித்த தகவலை இங்கே பார்ப்போம்.
சென்னையில் வசித்துவரும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வேலை , அலுவலக பணி போன்றவற்றிற்கு செல்ல பெரிதும் பொதுப் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள்.
சென்னையில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் போன்றவை இருந்தாலும் மாநகர பேருந்துகளையே பெரும்பாலான பயணிகள் நம்பியிருக்கின்றனர். குறிப்பாக 'பீக் அவர்ஸ்' என்று கூறப்படும் காலை, மாலை நேரங்களில் மாநகர பேருந்துகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படும்.

தனியார் பேருந்துகள் இயக்கம்
இந்த நேரங்களில் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வதை சர்வ சாதாரணமாக காண முடியும். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 500 தனியார் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக தனியார் பேருந்துகள் இயக்கம் குறித்த பேச்சுக்கள் மக்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதைக் காண முடிகிறது.

சென்னையில் ஒரே ஒரு தனியார் பேருந்து
தற்போது வரை சென்னையில் முழுக்க முழுக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும் ஒரே ஒரு தனியார் பேருந்தும் சென்னையில் ஓடிகொண்டுதான் இருக்கிறது. சென்னை வாசிகள் எப்போதாவது இந்த பேருந்தை பார்த்திருக்க கூடும். சென்னைக்கு வரும் வெளியூர்வாசிகள் கூட திடீரென கடந்து செல்லும் இந்த தனியார் பேருந்தை வியப்போடு பார்த்து விட்டு...சென்னையில் தனியார் பேருந்து கூட ஓடுகிறதா? என்று கூட எண்ணியிருக்க வாய்ப்பு உள்ளது.

கலைவாணி என்ற பெயரில்
சென்னையில் 60 ஆண்டுகளாக கலைவாணி என்ற பெயரில் ஓடும் இந்த ஒரு பேருந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது என்ற விவரத்தை இங்கே பார்ப்போம். சென்னை பிராட்வேயில் இருந்து பூந்தமலிக்கு தடம் எண் 54 என்ற பெயரில் இந்த தனியார் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த பேருந்து மட்டும் தற்போது சென்னையில் ஓடுவதற்கு அனுமதி கிடைத்தது என்பது குறித்து பார்ப்பதற்கு முன்னால், சென்னையில் தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்ட விவரத்தையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்
சென்னையில் 1970-களில் ஒரு சில தனியார் நிறுவனங்கள்தான் பேருந்துகளை இயக்கி வந்தன. அதன் பிறகு 1972 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு தனியார் பேருந்துகளை அரசுடமையாக்கியது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஒரு உரிமையாளர் 15 பேருந்துகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்ற சட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வந்தது.

நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி..
தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தால் சென்னையில் அதிக அளவில் பேருந்துகளை இயக்கி வந்த சில நிறுவனங்கள் பேருந்துகளை இயக்க முடியாத நிலை வந்தது. ஆனால் கலைவாணி டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனம் தரப்பில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே ஓடியது. இதனால், நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று இப்போதும் அந்த பேருந்து சென்னை மாநகரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications