ஊட்டி ஹோம் ஸ்டேக்களுக்கு சீல்! நீலகிரி ஓனர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தந்த அதிரடி ஷாக்!
சென்னை: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில், அங்கு செயல்பட்டு வரும் ஹோம் ஸ்டே மற்றும் தங்கும் விடுதிகள் முறையாக அனுமதி பெற்றுள்ளனவா என்பதை கண்காணிக்க சிறப்பு அமர்வு ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் இந்த சிறப்பு அமர்வு, கடந்த ஜனவரி மாதம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதில், நீலகிரியில் உரிய உரிமம் மற்றும் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்படும் ஹோம் ஸ்டே விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
நீலகிரி ஓனர்கள்
இந்த உத்தரவை தொடர்ந்து, ஊட்டி நகராட்சி அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது, ஊட்டியில் இயங்கி வந்த "ஆகாஷ் ரூம்ஸ் அண்ட் காட்டேஜஸ்' மற்றும் 'கோல்டன் லர்ச் ரெஸிடன்சி" ஆகிய 2 விடுதிகள் உரிய உரிமம் இன்றி செயல்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த விடுதிகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். தங்களது தரப்பில் அனைத்து அனுமதிகளும் முறையாகப் பெறப்பட்டுள்ளதாகவும், எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகாரிகள் தங்களது விடுதிகளுக்கு சீல் வைத்துள்ளதாகவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சீல் வைப்பதாக அறிவிப்பு
அப்போது நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், விடுதி உரிமையாளர்களின் வாதத்தை முற்றிலுமாக மறுத்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதமே இந்த விடுதிகளில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டு, கட்டிடத்தைப் பயன்படுத்தக் கூடாது என முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அவர்கள் விளக்கமளித்தனர்.
அந்த நோட்டீஸை விடுதி நிர்வாகம் செயல்படுத்தத் தவறியதாலேயே, சிறப்பு அமர்வின் உத்தரவுப்படி தற்போது சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலையிட மறுப்புத் தெரிவித்து சில முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தனர்.
நீலகிரி விவகாரங்களை ஒரு தனி சிறப்பு அமர்வு கண்காணித்து வரும்போது, இந்த அமர்வு ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அது ஏற்கனவே நிலுவையில் உள்ள விசாரணை நடைமுறைகளைப் பாதிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒருவேளை சிறப்பு அமர்வின் உத்தரவை அமல்படுத்துவதில் விதிமீறல் இருப்பதாக மனுதாரர்கள் கருதினால், அதை அந்தச் சிறப்பு அமர்விடமே முறையிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
நீதிபதிகள் அதிருப்தி
அத்துடன், சீல் வைக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக அரசுக்கு விண்ணப்பித்த பிறகு, மாவட்ட நிர்வாகம் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் அவசரகதியில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
எனவே, தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி விடுதி உரிமையாளர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு நீலகிரியில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது...!!
-
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications