அதிமுகவின் ஒரே எம்பி.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    OP Ravindranath Pressmeet: அதிமுகவின் ஒரே எம்பி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தான்- வீடியோ

    சென்னை: அதிமுகவின் ஒரே எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    நாட்டின் 17வது நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று பலத்த பாதுகாப்புக்கு இடையே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    நாடு முழுவதும் பாஜக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. நாடு முழுவதும் பாஜக அலை இருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.

    ரவீந்திரநாத் எம்பி

    ரவீந்திரநாத் எம்பி

    பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்து போட்டியிட்ட அதிமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத்துதான் அதிமுகவுக்கு கிடைத்த அந்த எம்பி.

    இன்று காலை அறிவிப்பு

    இன்று காலை அறிவிப்பு

    தமிழகத்தில் பல தொகுதிகளில் பெரும் இழுபறிக்கு பின்னரே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ரவீந்திரநாத்தின் வெற்றியும் இன்று காலைதான் அறிவிக்கப்பட்டது. ஓபி ரவீந்திரநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

    காப்பாற்றப்பட்ட மானம்

    காப்பாற்றப்பட்ட மானம்

    அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பெரும் கட்சிகள் அமைத்த மெகா கூட்டணியில் ஓபி ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளார். மெகா கூட்டணியின் ஒரே எம்பியாகி கட்சியின் மானத்தை காப்பாற்றியுள்ளார்.

    பாஜக திட்டம்

    பாஜக திட்டம்

    ஓபி ரவீந்திரநாத் ஒருவர் மட்டுமே அதிமுக கூட்டணியின் எம்பி என்பதால் அவருக்கு நிச்சயம் மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாஜக.

    அமைச்சர் மூலம்

    அமைச்சர் மூலம்

    அப்படி இருக்கையில் தமிழகத்திற்கான நலத்திட்டங்களை கொண்டு வர ஒரு எம்பியாவது பாஜக கூட்டணிக்கு தேவை. கூட்டணி கட்சி எம்பிக்கு அமைச்சர் பதவி கொடுத்தே திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த நினைக்கும் பாஜக.

    அமைச்சர் பதவி

    அமைச்சர் பதவி

    இல்லையெனில் தமிழகத்தில் 37 எம்பிக்களை கொண்ட திமுக தங்களின் எம்பிக்கள் தான் மத்திய அரசின் திட்டங்களை போராடி கொண்டுவந்ததாக மார்தட்டிக்கொள்வார்கள் என்ற அச்சத்தில் பாஜக நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு அமைச்சர் பதவியை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+