கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அரசுக்கு மக்கள் வைத்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக ஒவ்வொரு வாரமும் கிளாம்பாக்கத்தில் இருந்து வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் ஞாயிறு வரை இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த வாரம் ஓரளவு சரியாக அளவில் பேருந்துகளில் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் சுதந்திர தினம் உள்பட முக்கியமான பண்டிகை நாட்களில் அரசு இயக்கும் சிறப்பு பேருந்துகள் இந்த நாட்களில் போதுமானதாக இருப்பது இல்லை.. அதுவும் முன்பதிவு செய்து செல்லும் வகையிலான பேருந்துகள் போதிய அளவு இயக்கப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆவணி மாதத்தில் வரும் முதல் வளர்ப்பிறை முகூர்த்த தினம் வரும் 23ம் தேதி (ஞாயிறு) வருகிறது. பலரும் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு உள்ளது. ஏனெனில் திருமணம் மற்றும் புதுமனை புகுதல் மற்றும் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் பலரும் ஊருக்கு செல்ல ரெடியாகிறார்கள். இப்படி செல்லும் மக்களுக்காக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.

Operation of special buses from Kilambakkam Public request to the government

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்," வார இறுதி நாட்களையொட்டி சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்து தமிழகம் முழுவதும் கூடுதல் பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி பேருந்துகளுடன் கூடுத லாக சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 890 பேருந்துகளும், நாளை சனிக்கிழமை 820 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

இதுபோல் கோயம்பேட்டி லிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 110 பேருந்துகளும், நாளை 110 பேருந்துகளும் இயக்கப்பட வுள்ளன. மேலும், பெங் களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தலா 80 சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறுக்கிழமை பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்புவதற்காக தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 465 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து இயக்கத்தை கண் காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை ஓரளவு பேருந்துகள் சரியாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் பலரும் சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டினார்கள். அப்படி சென்றவர்கள் திரும்பி வர போதிய பேருந்துகள் இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டார்கள். ஞாயிறு அன்று கோவை காந்திபுரம், மதுரை மாட்டுத்தாவணி, திருநெல்வேலி பேருந்து நிலையம், தேனி பேருந்து நிலையம் போன்ற பல்வேறு ஊர்களில் மக்கள் போதிய பேருந்துகள் முக்கிய ஊர்களுக்கு இல்லாமல் அவதிப்பட்டார்கள். குறிப்பாக சென்னை வர சிரமங்களை சந்திக்க வேண்டியதிருந்தது. முக்கியமான விடுமுறை நாட்களில் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வரும் போது, சென்னைக்கு திரும்பும் வகையில் ஞாயிறுகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+