போர் ஒத்திகை ட்ரில் என்று பாகிஸ்தானை ஏமாற்றி.. இரவோடு இரவாக பக்காவான அட்டாக்! இந்திய ராணுவம் அசத்தல்
சென்னை: இந்திய ராணுவம் போர் ஒத்திகையை இன்று, அதாவது புதன்கிழமை செய்ய போவதாக கூறி இருந்த நிலையில், போர் ஒத்திகைக்கு பின்பே இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் நினைத்திருக்கும். ஆனால் போர் ஒத்திகை ட்ரில் என்று பாகிஸ்தானை ஏமாற்றி இந்தியா இன்றே இரவோடு இரவாக பக்காவான அட்டாக் செய்துள்ளது.
அதாவது பொதுவாக போர் ஒத்திகை நடத்தப்பட்டால் அதன்பின் இரண்டு - மூன்று நாட்களில் அல்லது சில நாட்கள் கழித்தே போர் நடத்தப்படும். தாக்குதல்கள் நடத்தப்படும். அந்த வகையில் இந்தியாவில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய போர் ஒத்திகையாக இது பார்க்கப்படுகிறது. போர்ச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஒத்திகை நடத்த, பல மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. விமான தாக்குதல் அபாயச் சங்கு ஒலிக்க விடுவது, தாக்குதல் நடந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் தாக்கத்தை மதிப்பிடுதல். அவை எப்படி இருக்கின்றன, சரியாக இயங்குகிறதா? விமானங்கள் வருவதை முறையாக அறிவிக்கிறதா என்பதை மதிப்பிடுவது. இந்திய விமானத்துடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை இயக்குதல். சோதனை செய்தல், படை கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டைச் சோதிப்பது.
எதிரி தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்கு பயிற்சி அளித்தல். விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல். முக்கியமான ஆலைகள்/நிறுவல்களை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடுளை செய்தல். அவசர சேவைகள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு சேவைகளின் செயல்பாடுகள் மற்றும் வேகத்தை கண்டுபிடித்தல்.
விபத்து தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வேகமாக செல்ல வெளியேற்றத் திட்டங்களை வகுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திசை திருப்பல்
இப்படி இந்திய ராணுவம் போர் ஒத்திகையை இன்று, அதாவது புதன்கிழமை செய்ய போவதாக கூறி இருந்த நிலையில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. போர் ஒத்திகைக்கு பின்பே இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் நினைத்திருக்கும். ஆனால் போர் ஒத்திகை ட்ரில் என்று பாகிஸ்தானை ஏமாற்றி இந்தியா இன்றே இரவோடு இரவாக பக்காவான அட்டாக் செய்துள்ளது. அதிகாலை 1 மணி அளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சார்பாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கே உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? எங்கெல்லாம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அங்கு தீவிரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
Precision strike என்று இதை அழைப்பார்கள். அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மற்றும் குறிக்கப்பட்டு தாக்கப்பட்டு உள்ளன. அதாவது இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications