பாகிஸ்தான் உள்ளே சீறிப்பாய்ந்த ராட்சசன்கள்.. ஏவுகணைகளை வைத்து சரமாரியான அட்டாக்.. வெளியான வீடியோ
சென்னை: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்திய ஆயுதப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) அருகே இருந்து நடத்தப்படும் தாக்குதல்கள் வீடியோவாக வெளியாகி உள்ளன.
கடந்த 10 நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் தினமும் துப்பாக்கி சூடுகளை நடத்தி வந்தது. கடந்த 10வது நாட்களாக ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள நிலைகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன.

740 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் உடனுக்குத்தான் பதிலளித்தது. இன்று அதிகாலை பாகிஸ்தான் துப்பாக்கி சூடுகளை நடத்தும் முன்.. முன் இந்தியா இந்த ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளது. இது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பாணி அட்டாக் கிடையாது. மாறாக precision strike பாணி அட்டாக்.
சர்ஜிக்கல் என்றால் உள்ளே சென்று தாக்க வேண்டும்.precision strike பாணி அட்டாக்கில் எல்லை தாண்டாமல் இந்தியாவில் இருந்து கொண்டே பாகிஸ்தான் உள்ளே இருக்கும் தளவாடங்கள் குறி வைத்து ஏவுகணை மூலம் அழிக்கப்படும். அந்த வகையில் தீவிரவாத தளவாடங்கள் மட்டும் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன.
இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு துறையின் இந்த வீடியோ காட்சிகளை ANI ஊடகம் வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் மீது அட்டாக்:
இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
#WATCH | Poonch, Jammu and Kashmir: Visuals from Line of Control (LoC) as the Indian Armed Forces launched ‘Operation Sindoor’, hitting terrorist infrastructure in Pakistan and Pakistan-occupied Jammu and Kashmir from where terrorist attacks against India have been planned and… pic.twitter.com/A7DG8dRZ6v
— ANI (@ANI) May 6, 2025
Precision strike என்று இதை அழைப்பார்கள். அதாவது அதாவது தீவிரவாத கேம்ப் மட்டும் குறிக்கப்பட்டது . இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது..
இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை. இதற்கு இடையே பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது . பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பாக்கிஸ்தான் ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறி வைக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக லஸ்கர் இ தொய்ப்பா அமைப்பின் தலைமையிடம் குறி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏவுகணை அட்டாக் மட்டுமே
இந்த முறை இந்தியாவில் இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications