5 மண்டலங்களில் திமுக, அதிமுக, தவெக, நாதக எவ்வளவு வாக்குகளை பெறும்? அக்னி நியூஸ் சர்வீஸ் கணிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 மண்டலங்களில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெறும் என்று அக்னி நியூஸ் சர்வீஸ் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கவுள்ளது. திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக ஆகிய 4 கட்சிகள் நேருக்கு நேர் மோதுவதால், மக்களிடையே அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதன்படி அக்னி நியூஸ் சர்வீஸ் கருத்துக்கணிப்பின்படி திமுக 169 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 64 தொகுதிகளிலும், தவெக ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் தரப்பில் மண்டல வாரியாக எந்தக் கட்சி எவ்வளவு வாக்குகளை பெறும் என்று கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தென் மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் திமுக 40 தொகுதிகளை வென்று 42.36% வாக்குகளையும், அதிமுக 18 தொகுதிகளில் வென்று 35.62% வாக்குகளையும், தவெக 14.46% வாக்குகளையும், நாதக 4.63% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற கட்சிகள் 2.93% வாக்குகளை பெறும் என்று கணித்திருக்கிறது. அதேபோல் மத்திய மண்டலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 37 தொகுதிகளில் திமுக 33 தொகுதிகளில் வென்று 45.27% வாக்குகளையும், அதிமுக 4 தொகுதிகளில் வென்று 35.14% வாக்குகளையும், தவெக 12.93% வாக்குகளையும், நாதக 3.98% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலத்தில் உள்ள 50 தொகுதிகளில் திமுக 31 தொகுதிகளை வென்று 40.94% வாக்குகளையும், அதிமுக 19 தொகுதிகளில் வென்று 37.26% வாக்குகளையும், தவெக 15.77% வாக்குகளையும், நாதக 3.13% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் உள்ள 52 தொகுதிகளில் திமுக 34 தொகுதிகளில் வென்று 42.84% வாக்குகளையும், அதிமுக 18 தொகுதிகளில் வென்று 36.73% வாக்குகளையும், தவெக 13.91% வாக்குகளையும், நாதக 5.17% வாக்குகளையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் திமுக 31 தொகுதிகளில் வென்று 44.12% வாக்குகளையும், அதிமுக 5 தொகுதிகளில் வென்று 29.26% வாக்குகளையும், தவெக 1 தொகுதியில் வென்று 18.4% வாக்குகளையும், நாதக 5.17% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications