காரைக்குடி தொகுதி நிலவரம் என்ன? சீமான் சட்டசபை செல்வாரா? விகடன் கருத்துக்கணிப்பு
சிவகங்கை: சீமான் சட்டசபை செல்ல வேண்டும் என்ற இலக்குடன் நாதகவினர் பணியாற்றி வரும் சூழலில், காரைக்குடி தொகுதியின் கருத்துக்கணிப்பை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது. 3 வலிமையான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதே கணிக்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கிறது. அந்த வகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுத்த சில நாட்கள் சிவகங்கை மாவட்டத்திலேயே முகாமிட இருக்கிறார். இந்த முறை சட்டசபையில் சீமானின் குரல் என்ற இலக்குடன் நாதகவினர் காரைக்குடி தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

2016 சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியிலும், 2021 சட்டசபைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிட்டு சீமான் தோல்வி அடைந்தார். இந்த முறை நடிகர் விஜய் அரசியல் களம் புகுந்துள்ளதால், எப்படியாவது சட்டசபை செல்ல வேண்டும் என்பதில் சீமான் தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப கடந்த 6 மாதங்களாக நாதகவினர் காரைக்குடி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் காரைக்குடி தொகுதியில் களம் கடுமையாக மாறி இருக்கிறது. ஏனென்றால் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி களம் காண்கின்றார். எளிதாக அணுக கூடியவர் என்ற பெயர் தொகுதியில் இருப்பதோடு, கூட்டணியின் பலமும் மாங்குடிக்கு கூடுதல் சாதகத்தை உருவாக்கி கொடுக்கிறது.
அதிமுக கூட்டணி சார்பாக அமமுக வேட்பாளர், தேர்போகி பாண்டி, சமூக வாக்குகளை தன் பக்கம் திருப்புகிறார். அதேபோல் தவெக தரப்பில் போட்டியிடும் பிரபு அதிருப்தி வாக்குகளை பிரிக்கிறார். விவசாயிகள், நடுநிலை வாக்காளர்கள் நாதகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்த நிலையில்தான், காரைக்குடி தொகுதி தொடர்பாக ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி, காரைக்குடி தொகுதியில் மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி மீண்டும் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 2வது இடத்தை பிடிப்பார் என்றும், தவெக பிரபு 3வது இடத்திற்கு செல்வார் என்றும், அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி 4வது இடம் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையில் பெரிய வாக்கு வித்தியாசம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications