தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட்
சென்னை: IANS நிறுவனம் Matrize உடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில், தவெக 6 முதல் 12 இடங்களில் வெற்றி பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணியை விட அதிமுக லீடிங்கில் உள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், IANS நிறுவனம் Matrize உடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி அதிமுக - பாஜக கூட்டணி தான் தமிழக சட்டசபை தேர்தலில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அதிமுக114 தொகுதிகள் முதல் 127 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் திமுக 104 முதல் 114 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் தவெக கட்சி உள்ளது.
IANS - Matrize கருத்துக்கணிப்பின்படி தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 1 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக கருத்துக்கணிப்பு ஒருபுறம் இருக்க வாக்கு சதவீதம் வாரியாகவும் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது IANS. அதன்படி அதிமுக கூட்டணிக்கு 39 முதல் 40 % வாக்குகள் கிடைக்கும், திமுக கூட்டணிக்கு 37 - 38 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு 14 -15 % வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு 12% வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்து கணிப்பில் திமுகவை காட்டிலும் தொகுதியிலும் வாக்குகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலையில் இருப்பது அரசியல் பார்வையாளர்களை கவனிக்க வைத்துள்ளது. குறிப்பாக, இந்த முடிவுகளுக்கு தவெக ஒரு முக்கிய காரணம் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications