10 டீம்களாக பிரிந்த எதிர்க்கட்சிகள்.. அதிமுக, தவெக, பாஜகவில் மோதல் உச்சம்.. இந்த போட்டோஸ் பாருங்க
சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ள நிலையில் எதிரணியில் பெரிய அளவில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. உட்கட்சி பிளவு, கட்சி தாவல், கட்சிக்கு உள்ளேயே உள்ளடி வேலைகள் என்று பல அணிகள் பிளவுபட்டு உள்ளன.
ஆளும் கூட்டணி வலுவாக இருக்கும் பட்சத்தில் எதிரணி தரப்பில் கடுமையான பிளவுகள் ஏற்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரில் ஒரே இந்திய அணி வீரர்கள் வேறு வேறு அணிக்கு ஆடுவது போல.. எதிர்க்கட்சிகளில் பெரிய அளவில் பிளவுகள் ஏற்பட்டு உள்ளன. அதிமுகவில் நான்கு பக்கங்களாக பிளவுபட்டு செயல்படுகின்றன.
1. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிகாரபூர்வ அதிமுக மிக பலமானதாகவும், வியூகம் வகுப்பதிலும், தலைமைத்துவத்திலும் உறுதியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

2. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். தவெகவிற்கு டிரேட் ஆகிவிட்டார். அவருக்கு கட்சியின் பழைய உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துகிறது. இவர் ஒரு பக்கம் அதிமுக வாக்குகளை பிரிப்பர்

3. ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி சற்று ஒதுக்கப்பட்டிருந்தாலும், கட்சிக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் செயல்படுவதாகக் கூறுகிறது. அவருக்கு முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன.

4. ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்து பின்னர் அமமுகவை தொடங்கிய டி.டி.வி. தினகரன் டீம் தனக்கான இடத்தை மீட்டெடுக்க தீவிரமாக முயற்சிக்கிறது. இவர்களும் ஒரு பக்கம் அதிமுக வாக்குகளை பிரிப்பார்கள்.

5. பாட்டாளி மக்கள் கட்சியில் இரு முக்கிய அணிகள் உள்ளன. கடுமையான உட்கட்சி மோதல் அங்கே உள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி நவீன கொள்கை அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. பாமகவிற்கு நாங்கள்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். கட்சி இளைஞர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

6. இன்னொரு பக்கம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான அணி, கட்சியின் பாரம்பரியமான தலைமைப் பொறுப்பை ஏற்று, அதற்கு உரிமை கொண்டாடுகிறது.

7. பாஜகவில் அதன் அதிகாரபூர்வமான தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான டீம் கள அளவில் வலுவான அமைப்புரீதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் கட்சியின் விரிவாக்கத்தை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையிலான டீம், ஆக்ரோஷமான அணுகுமுறையுடன், கட்சியை வேகமாக மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. அதோடு கட்சியை மீண்டும் தங்கள் கண்ட்ரோலில் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகிறது.

9. தமிழக வெற்றி கழகத்தில் அதன் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான டீம், கட்சியின் அமைப்புரீதியான கட்டமைப்பு மற்றும் உள் ஒருங்கிணைப்புப் பணிகளைக் கவனிக்கிறது.

10. அதே சமயம், ஆதவ் அர்ஜுனா தலைமையிலான டீம், நடிகர் விஜய்யின் மக்கள் ஆதரவை கள அளவில் பெருக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆதவ் - புஸ்ஸி இடையிலும் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வரும் நிலையில், அங்கேயும் கடுமையான பிளவுகள் ஏற்பட்டு உள்ளன.













Click it and Unblock the Notifications