சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்தில் பூங்கோதை ஆலடி அருணா..? மாற்றங்களுக்கு தயாராகும் திமுக..!
சென்னை: திமுக பொதுக்குழு செப்டம்பர் 9-ம் தேதி கூடவுள்ள நிலையில் இப்போதே அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொண்டது.
புதிய பொதுச்செயலாளர் புதிய பொருளாளர் தேர்வு பற்றி ஒரு புறம் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் துணைப் பொதுசெயலாளர் பதவிக்கான இடங்களிலும் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
அந்த வகையில் நாடார் சமுதாய பிரதிநிதித்துவ அடிப்படையில் பூங்கோதை ஆலடி அருணா திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைவருடன் மேடையில்
திமுகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி மிக முக்கியமானது. பொதுக்குழு, செயற்குழு, மாநாடு, உள்ளிட்ட கட்சி சார்ந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் தலைவரோடு ஒரே வரிசையில் மேடையில் அமரும் வாய்ப்பு துணை பொதுச்செயலாளர்களுக்கு கிடைக்கும்.

துணை பொதுச்செயலாளர்
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், ஆகியோர் இருக்கின்றனர். இதனிடையே சற்குணபாண்டியன் உயிருடன் இருந்தபோது அவர் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை கனிமொழிக்கு கொடுக்குமாறு ராஜினாமா செய்து அதை கருணாநிதி ஏற்க மறுத்தது தனிக்கதை. சற்குணபாண்டியன் மறைவை அடுத்து மகளிர் கோட்டாவில் அந்த இடத்திற்கு பரிசீலிக்கப்பட்டவர் பூங்கோதை ஆலடி அருணா.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
ஆனால் பூங்கோதை ஆலடி அருணா ஜூனியர் எனக்கூறி இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் அப்போது ஆட்சேபனை தெரிவித்ததால் மீண்டும் சுப்புலட்சுமி ஜெகதீசன் 2015-ம் ஆண்டு திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போதைய சூழலில் வயது முதிர்வு காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணா பெயர் பரிசீலனையில் உள்ளது.

நியமனம்
சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருடைய இடத்திற்கு பூங்கோதை ஆலடி அருணாவை நியமனம் செய்வதற்கான ஆலோசனையும் திமுகவில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆலங்குளம் எம்.எல்.ஏ.வாக உள்ள பூங்கோதை திமுக மருத்துவ அணி செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications