ஜெ. கூட இப்படி பண்ணது இல்லை! முதுகில் குத்திட்டாரு! அங்க எடப்பாடி மனசு உறுத்த! இங்க குழி பறித்த மாஜி
சென்னை: முக்குலத்தோரை தொடர்ந்து எதிர்ப்பதால் எடப்பாடிக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை உறுதியாக சொல்லலாம். அவரை முடக்கி போடும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி முக்குலத்தோரை பழிவாங்கிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த மனஉறுத்தல் இருக்கிறது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு நேற்று சென்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்தது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றார். இங்கே எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஜெயலலிதா பற்றி தேவர் ஜெயந்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஆனால் ஜெயலலிதா எங்குமே இப்படி ஒரு சமூகத்தை முறைத்துக்கொண்டது இல்லை. அவர் ஒரு சமூகத்தை எதிர்த்ததே இல்லை. அவர் எல்லா சமூகத்திற்கும் நெருக்கமாக, அன்பாக இருந்துள்ளார். ஆனால் எடப்பாடி அப்படி இல்லை. அவர் முக்குலத்தோருக்கு எதிராக செயல்பட்டு உள்ளார். அவர் நம் முதுகில் குத்திவிட்டார் என்பதில் முக்குலத்தோர் தெளிவாக இருக்கிறார்கள்.

எடப்பாடி முக்குலத்தோர் பகையை சம்பாதித்துவிட்டார். குருபூஜையில் எடப்பாடியால் மோதல் வந்திருக்கும். ஆனால் தேவரை பார்க்க வந்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது யாரும் தாக்கவில்லை. மரியாதைக்காக எடப்பாடியை விட்டு வைத்தனர். அவர் 2-3 வருடம் உழைக்க வேண்டும். அப்போதுதான் முக்குலத்தோர் நம்பிக்கையை பெறுவார். இன்னொரு பக்கம் எடப்பாடி உடன் இருக்கும் மாஜி அமைச்சர்களும் இதை பற்றி கவலைப்படவில்லை.
மாஜிக்கள் மாயம்: வரப்போவது லோக்சபா தேர்தல். இதில் செல்லூர் ராஜுவோ, உதயகுமாரோ நிற்க போவது இல்லை. அதனால் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருக்கும் மாஜிக்கள் யாரும் இந்த ஜாதி பிரச்சனை பற்றி இப்போது கவலைப்படாமல் இருக்க காரணம் இது எம்பி தேர்தல். இதில் அவர்கள் யாரும் நிற்க போவது இல்லை. அதனால் முக்குலத்தோர் மாஜிக்கள் இதை பற்றி கவலைப்படவில்லை. செல்லூர் ராஜுவோ, உதயகுமாரோ இந்த எம்பி தேர்தலில் நிற்க மாட்டார்கள்.
அதனால் இவர்கள் அதை பற்றி கவலைப்படவில்லை. அதனால் எடப்பாடிக்கும் இதை பற்றி யாரும் எடுத்து சொல்வது இல்லை. சசிகலா சிறைக்கு செல்லும் போது எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகிறார். அவர் அப்போதும் பாப்புலர் லீடர் இல்லை. அதன்பின் தினகரன் மூலம் ஆட்சி நடத்தினார்.
அதன்பின் பாஜக , ஓ பன்னீர்செல்வம் உதவியோடு ஆட்சி செய்தார். அவர் தனக்கு உதவி செய்த சசிகலாவை கவிழ்த்தார். அதன்பின் தினகரனை ஏமாற்றினார். அதன்பின் ஓ பன்னீர்செல்வத்தை ஏமாற்றினார். இப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டார். இப்படி முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்களை எடப்பாடி ஏமாற்றி விட்டார் .

அவர் முக்குலத்தோரை காயப்படுத்திவிட்டார். அதற்கு பதில் தர வேண்டும். இல்லையென்றால் 2024ல் அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதே போக்கை அவர் கடைபிடித்தால் முக்குலத்தோர் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள். அவரை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
எடப்பாடிக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை உறுதியாக சொல்லலாம். அவரை முடக்கி போடும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி முக்குலத்தோரை பழிவாங்கிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த மனஉறுத்தல் இருக்கிறது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications