அறிவித்த திட்டங்களையே செயல்படுத்தவில்லை.. ஏமாற்றுவதற்கு பட்ஜெட்டில் புது அறிவிப்புகள்- எடப்பாடி
சென்னை: 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்களுக்கு விரைவில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும், ஓராண்டில் 40 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டது. டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டிலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். விளம்பரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? ரேஷனில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? 2 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்கள்.
ஆனால் 40 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று கூறுகின்றனர். இதன் மூலமாக திமுக பட்ஜெட்டில் வெற்று அறிவிப்பு மற்றும் நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளையே அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம், கல்விக் கடன் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் சென்னைக்கு அருகில் புதிய நகரம், பட்டா வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
காலை உணவுத் திட்டம் புதிய திட்டம் அல்ல; அதுவும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான். கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் அரசு பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளனர். அடுத்த ஓராண்டில் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடியுமா? 2026 தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியாது.
நாட்டிலேயே அதிக கடன் வாங்கியுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். நிர்வாக திறமையற்ற அரசு நடக்கிறது என்பதே எதார்த்தமான உண்மை. வருவாயும் அதிகரிக்கிறது; கடனும் அதிகரிக்கிறது; ஆனால் திட்டங்கள் எதுவும் இல்லை. எதிர்ப்பை குறைக்க பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications