சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஎஸ்கே ஓனர் நிறுவன விழாவில் அமித்ஷா.. அட தோனியும் வந்திருக்காரே! பக்கத்துல யாருன்னு கவனிச்சீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 75 வது ஆண்டு விழாவில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இதன் பவள விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

முக்கிய பிரபலத்தை தட்டித் தூக்கிய பாஜக.. அமித்ஷா முன்னிலையில் இணைகிறார்? பரபர தகவல்! முக்கிய பிரபலத்தை தட்டித் தூக்கிய பாஜக.. அமித்ஷா முன்னிலையில் இணைகிறார்? பரபர தகவல்!

ஆளுநர் மாளிகையில் அமித்ஷா

ஆளுநர் மாளிகையில் அமித்ஷா

இதற்காக அவர் தற்போது சென்னைக்கு வருகை தந்து இருக்கிறார். நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்த அமித்ஷாவுக்கு தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். இதனை தொடர்ந்து இரவு தங்குவதற்காக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார் அமித்ஷா.

 இந்தியா சிமெண்ட்ஸ் விழா

இந்தியா சிமெண்ட்ஸ் விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார். இன்று காலை 11 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் பவள விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவியும் விழாவுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் விழாவுக்கு வருகை தந்தார்.

தோனியுடன் ஓபிஎஸ்

தோனியுடன் ஓபிஎஸ்

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ். தோனி கலந்துகொண்டார். அவர் அமர்ந்த இருக்கைக்கு அருகாமையிலேயே தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார்.

தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவரால் வர முடியாத காரணத்தால் அம்மாநில நிதியமைச்சர் உப்பென்னா ரெட்டி வந்துள்ளார். இவர்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் வருகை தந்து இருக்கிறார்கள்.

பாஜகவினருடன் ஆலோசனை

பாஜகவினருடன் ஆலோசனை

இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாயத்துக்கு மாலை 3 மணியளவில் அமித்ஷா செல்கிறார். கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் அமித்ஷா, மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu former CM O.Panneerselvam and Former Indian captain Dhoni participated together with Union minister Amit shah in India cements event
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X