எடப்பாடிக்கு டென்சன் தரும் பன்னீர்.. டிஸ்சார்ஜ் ஆனவுடன் அதிரடி.. 14 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
சென்னை: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் 14 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்வதாக அறிவித்து உள்ளார்.
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

பொதுச்செயலாளர் இபிஎஸ்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர்

ஓபிஎஸ் மகன்கள் நீக்கம்
இந்த நிலையில் மேலும் 18 பேரை கட்சியிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரை ஓபிஎஸ் நீக்கினார்.

ஓபிஎஸ் அதிரடி
இந்த நிலையில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று உடல் நலம்பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த கையோடு 14 பேரை அதிமுக மாவட்ட செயலாளர்களாக அறிவித்து உள்ளார். எம்பி ஆர்.தர்மரை ராமநாதபுரம் மாவட்ட செயலாளராகவும், கோவை செல்வராஜை கோவை மாவட்ட செயலாளராகவும் அவர் நியமித்து உள்ளார்.
Recommended Video

மாவட்ட செயலாளர்கள் நியமனம்
சென்னை புறநகர் - முன்னாள் எம்.எல்.ஏ வி.என்.பி.வெங்கட்ராமன், மதுரை - ஆர்.கோபாகிருஷ்ணன், வடசென்னை வடக்கு (மேற்கு) - கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை தெற்கு (மேற்கு)- எம்.எம்.பாபு, தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட கழகச் செயலாளராக ரெட்சன் சி.அம்பிகாபதி, வடசென்னை வடக்கு (கிழக்கு) - ஜே.கே.ரமேஷ், திருச்சி புறநகர் தெற்கு - எம்.ஆர்.ராஜ்மோகன், வடசென்னை தெற்கு (மேற்கு) - டி.மகிழன்பன், சிவகங்கை - ஆர்.வி.ரஞ்சித் குமார், திருநெல்வேலி புறநகர் - என்.சிவலிங்கமுத்து, தென்காசி தெற்கு - வி.கே.கணபதி ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications