ஓபிஎஸ் சொத்துமதிப்பு 5 ஆண்டுகளில் அதிரடி உயர்வு - மு.க ஸ்டாலினுக்கு எத்தனை கோடி சொத்து தெரியுமா
துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 843 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 55 லட்சம் ரூபாயாக இருந்த அவரின் அசையும் சொத்து மதிப்பு தற்போது 5.19 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதேபோல அசையா சொத்துக்கள் கடந்த 2016ஆம் ஆண்டு 98 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது 2.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
Recommended Video

கடந்த 2001ஆம் ஆண்டு, பன்னீர்செல்வம் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். 20 ஆண்டுகளில் ஓ.பன்னீர் செல்வத்தின் சொத்து மதிப்பு 5.19 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களில் அசையும் சொத்து, அசையா சொத்து என சொத்து மதிப்புகளைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தில் விதி. கடந்த வெள்ளிக்கிழமையன்று போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்துமதிப்பு விவரத்தை தாக்கல் செய்துள்ளார்.

ரூ.7.83 கோடி சொத்துக்கள்
கடந்த ஆண்டுகளுக்கு முன் ரூ.1.53 கோடியாக இருந்த சொத்துமதிப்பு தற்போது ரூ.7.83 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் அசையும் சொத்து ரூ.5.19 கோடி, அசையா சொத்து ரூ.2.64 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடன் ரூ.2.72 கோடி
கடந்த 2016ம் ஆண்டில் அசையா சொத்து 98 லட்சமாக இருந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு 2.64 கோடியாக உயர்ந்துள்ளது. இதனைபோல், கடன் அளவும் 988% அதிகரித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடன் தொகை 25 லட்சமாக இருந்தது. 2021ஆம் ஆண்டு கடன் தொகை ரூ.2.72 கோடியாக அதிகரித்துள்ளது.

சொத்து மதிப்பு உயர்வு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு 2016 ஆம் ஆண்டை விட ரூ.3 கோடி உயர்ந்துள்ளது. ஸ்டாலினின் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 1.17 கோடியாகவும் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலினை விட உதயநிதிக்கு அதிகம்
துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளன. ஸ்டாலின் மீது 45 நிலுவையில் உள்ளன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினை விட ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறைவாகவே உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ. 28 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்











Click it and Unblock the Notifications