காலி டப்பா ஆன தேனி..ஓபிஎஸ் கூடாரம் மொத்தமா காலியாகுது! ஒட்டுமொத்தமாய் தவெகவுக்கு தாவும் மா.செ.க்கள்!
திண்டுக்கல்: ஓபிஎஸ் அணியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நிர்வாகிகள் 500 பேருடன் கூண்டோடு தவெக-வில் இணைவதாக அறிவித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் மேலும் 30 மாவட்ட செயலாளர்கள் தவெக-வில் இணைய உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ் கூடாரம் மொத்தமாக காலியாகவுள்ளதாக கூறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அ.இ.அ.தி.மு.க கட்சி சார்பாக போட்டியிட்டு வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த நிலையில் இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்.
அதன்பின்னர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ஓ.பி.எஸ் அணியின் தொண்டர் மீட்புக் கழகத்தில் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 500 பேருடன் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வந்த தொண்டர் மீட்பு கழகத்திலிருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக இன்று வேடசந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஓபிஎஸ் அணியின் சரிவு
அப்போது அவர் கூறிய போது," தொடர்ந்து நடந்து வருகின்ற அரசியல் நிகழ்வுகள் கழகத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையும் ஏற்படுத்துவதால் அந்த அமைப்பில் இருந்து நாங்கள் ஒட்டுமொத்தமாக விலகுவது என ஏக மனதாக தீர்மானித்து இருக்கிறோம். இன்று இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் துணிச்சலாக மக்கள் மத்தியில் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்பை பற்றி கவலைப்படாமல் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் உரிமைக்காகவும் துணிச்சலாக குரல் கொடுக்கின்ற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய்.
தமிழக வெற்றி கழகம்
அவரின் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான நிர்வாகிகள் அத்தனை பேரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உழைப்பது என தீர்மானித்திருக்கிறோம். இது நான் மட்டுமல்ல தமிழகத்தில் தொண்டர் மீட்பு கழகத்தில் இருக்கின்ற 30க்கும் மேற்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்து, தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைமைக்கு தகவலை தெரிவித்து அங்கே இணைந்து எந்த நிபந்தனையும் மற்ற வழியில் கழகத்தில் இணைந்து விஜய்யை தமிழ்நாட்டினுடைய முதல்வர் ஆக்குவதற்கு முடிவு செய்து இன்று இந்த கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
அதிமுக மோதல்
அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. புரட்சித்தலைவர் புரட்சித்தலைவிக்கு நிகராக அதிமுகவில் யாரும் இல்லை. அதை அவர்கள் உணர்ந்து ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஒவ்வொருவரும் சுயநலமாக சிந்திக்கின்ற ஒரு மனப்பான்மையில் இருப்பதால் அதிமுக-விற்கு இந்த பின்னடைவே தவிர, இந்த சூழலில் இருந்து அவர்கள் மீண்டு வர அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு இடம் இல்லை. ஏன் அவர்கள் தங்களுடைய ஈகோவை விட்டுக் கொடுத்து விட்டு ஒன்று சேர்வதில் என்ன பிரச்சனை.
விஜய் அரசியல்
அதிமுகவில் ஒன்றை கோடி தொண்டர்கள் உள்ளார்கள் அவர்கள் என பதவியா கேட்கிறார்கள். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் என்று சொல்லும் குரலுக்கு மதிப்பில்லை என்கிற போது யார் அங்கே போய் என்ன செய்ய முடியும். கடந்த காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஒன்றிய பெருந்தலைவர்கள் அ.தி.மு.க-விலிருந்து வெற்றி பெற்றார்கள். அதில் இரண்டு ஒன்றிய தலைவர் பதவிகளை திமுக கட்சி காலி செய்தார்கள். அதற்கு திண்டுக்கல் சீனிவாசனும் நத்தம் விஸ்வநாதனும், எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
திண்டுக்கல் நிர்வாகிகள்
ஒரு கட்சியின் அழிவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த தலைமை . இந்த கட்சியை எப்படி ஆட்சி கட்டிலில் அமர்த்துவார்கள் என்பது தான் என் கேள்வி. மொத்தமாக 30 மாவட்ட செயலாளர்கள் த.வெ.க-வில் இணைவதாக முடிவு எடுத்துள்ளார்கள். என்னை போல் இருந்தவர்கள் பெரும்பாலானோர் அங்கு தான் சென்று இணைய உள்ளார்கள். நாங்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் 500 பேர் அப்படியே த.வெ.க-வில் இணைய உள்ளோம். இரண்டு ஒரு நாளில் அறிவிப்பு வந்த உடன் அனைவரும் சென்னை சென்று இணைந்து விடுவோம்" என்று தெரிவித்தார்.
-
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications