தவெக தலைவர் விஜயுடன் பேசினீர்களா? ஓபிஎஸ் கொடுத்த பதில்.. டிசம்பரில் நடக்கும் பெரிய சம்பவம்!
சென்னை: தவெக தலைவர் விஜயுடன் தாம் பேசவில்லை என்றும், விஜயும் தம்முடன் பேசவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாஜக உடனான உறவை முறித்துக் கொண்ட ஓபிஎஸ் தரப்பு, அடுத்தடுத்து காய்களை நடத்தி வருகிறது. இதனால் விரைவில் விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரிய நிலையில், அந்த அனுமதி கடைசி வரை கிடைக்கவில்லை. ஏற்கனவே 2 முறை தமிழகம் வந்த போதும், அமித்ஷாவும் சந்திக்கவில்லை. இதனால் பாஜகவிடம் உரிய மரியாதை கிடைக்காத ஆதங்கத்தில், பாஜக உடனான உறவை முறித்துக் கொள்வதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே ஓபிஎஸ் தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே சென்று சந்திப்பு நடத்தி உள்ளார். ஓபிஎஸ் தரப்பை வீட்டின் வாசலுக்கு வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று அழைத்து சென்றார்.
ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது திமுக உடனும் ஓபிஎஸ் சந்திப்பு நடத்தி இருக்கும் சூழலில், விரைவில் புதியக் கட்சி தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கட்சியோ, அமைப்போ இல்லாமல் ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்க முடியாது. இல்லையென்றால் சுயேட்சையாக மட்டுமே போட்டியிட முடியும்.
அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு அரசியல் ஆலோசகராக இருந்து வரும் ஜான் ஆரோக்கியசாமியை ஓபிஎஸ் தரப்பு அணுகிய போது, டிசம்பர் வரை பொறுத்திருக்குமாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தொடங்கப்போகும் மக்கள் சந்திப்பு பயணத்திற்குப் பின்னரே கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கும் எண்ணத்தில் தவெக உள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது.
திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளின் கதவுகளையும் ஓபிஎஸ் தரப்பு தட்டி இருக்கிறது. இந்த நிலையில் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு ஓபிஎஸ், விஜயுடன் தாம் இதுவரை பேசவில்லை. விஜயும் இதுவரை தம்முடன் பேசவில்லை என்று தெரிவித்தார். இதனால் ஓபிஎஸ் அடுத்ததாக அமைப்பு ரீதியாக உருவாகுவதற்கான பணிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன?












Click it and Unblock the Notifications