Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவர் கான்ஃபிடன்ஸில் ஓபிஎஸ்.. ஓட்டக்கார தேவர் மகன் திமுகவுக்கு வரமா? சாபமா? பரபர தேனி பாலிடிக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்னும் பல அரசியல் மாற்றங்கள் அரங்கேறலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பல ஆண்டுகளாக அதிமுகவிலும் மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்த ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது மிக பெரிய அரசியல் ட்விஸ்ட் என்றே சொல்லலாம். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வருகை திமுகவுக்கு லாபமா? அவரது செல்வாக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் கை கொடுக்குமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் நெருங்கிய ஆதரவாளராகவும், பல்வேறு அரசியல் சூழல்களில் கட்சி மற்றும் ஆட்சியின் பொறுப்பை ஏற்றவராகவும் இருந்த ஓ. பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவின் விசுவாசியாக அடையாளப்படுத்தப்பட்டவர்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 O Panneerselvam dmk

பல சிக்கல்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா சமாதியில் அவர் தொடங்கிய தர்மயுத்தம், அவரது அரசியல் வாழ்க்கையில் தனித்துவமான இடத்தை பெற்றது. அதிமுக கட்சியை காப்பாற்றுவேன் என்ற உறுதியுடன் அவர் எடுத்த அந்த நிலைப்பாடு, பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடந்த பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் நேரடி எதிரணிகளாக இருந்து வருகின்றன. அந்த வரலாற்றுப் பின்னணியில், அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் பார்வையில் எதிர்பாராத நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த மாற்றம் அவரது முந்தைய அரசியல் நிலைப்பாடுகளுடன் முரண்படுகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவரது இந்த முடிவு, அவரது தனிப்பட்ட அரசியல் செல்வாக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஓபிஎஸ் திமுக

தென் தமிழகத்தில் குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தில் அவருக்கு இருந்த ஆதரவு, அதிமுக அடையாளத்தின் அடிப்படையில் உருவானது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த ஆதரவு, அவர் கட்சி மாறிய பிறகும் அதேபோல் தொடருமா என்பது குறித்து உறுதியானது இல்லை. திமுக எதிர்ப்பு மனநிலை கொண்ட வாக்காளர்கள் அவரது அரசியல் மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகமும் நிலவுகிறது. இந்த சூழலில், அவரது அரசியல் நகர்வு அதிமுக தலைமையிற்கே பலம் சேர்க்கும் எனவும் சிலர் கருதுகின்றனர். குறிப்பாக எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக அமைப்பு வலுப்பெறக்கூடும் என்ற மதிப்பீடுகளும் வெளியாகியுள்ளன.

ஓ பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வத்தின் கட்சி மாற்றம், அதிமுக ஆதரவாளர்களின் மனநிலையையும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. திமுகவுக்குள் அவரின் வருகை புதிய அரசியல் சமநிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அவரது சொந்த மாவட்டமான தேனியில் அரசியல் மாற்றங்கள் அதிகம் பேசப்படுகின்றன. மாவட்டத் தலைமைகள் மற்றும் உள்ளூர் அமைப்பு வலிமை ஆகியவை திமுக அரசியல் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், திமுகவில் சிக்கல்களை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தேனி அரசியல்

திமுக நடைமுறையில் மாவட்டச் செயலாளர்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த கட்சிக்குள் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஓ. பன்னீர்செல்வம் முன்னர் செயல்பட்ட அரசியல் சூழல் மற்றும் தற்போதைய கட்சி அமைப்பு ஆகியவற்றின் வித்தியாசம் அவரது எதிர்கால அரசியல் பாதையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அவரது அரசியல் பயணத்தில் முன்னர் நடந்த சில நிகழ்வுகளும் தற்போது மீண்டும் பேசப்படுகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்

சட்டமன்றத்தில் மு. கருணாநிதி குறித்து பாராட்டு தெரிவித்தது, மு.க. ஸ்டாலினை சந்தித்தது போன்ற நிகழ்வுகள் அவரது அரசியல் திசை மாற்றத்தின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகின்றன. இதனால் அவரது தற்போதைய முடிவு திடீர் மாற்றமாக இல்லையெனவும் சிலர் கருதுகின்றனர். அவரது எதிர்கால அரசியல் செயல்பாடு எந்தத் தொகுதியில் நடைபெறும் என்பது பற்றியும் பல தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக அவர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. ஆனால், அவருக்கு செல்வாக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது இன்னும்சில வாரங்களில் தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+