ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம்
சென்னை: திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததை அவரது கார் ஓட்டுநர் ஏற்றுக் கொள்ளாததால், அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதியிலேயே வேலையை விட்டுவிட்டு வெளியேறியதாக வீடியோ வைரலான நிலையில் அன்றைய தினம் நடந்தது என்ன என்பது குறித்து அந்த ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஓட்டுநர் கூறியிருப்பதாவது: அண்ணா அறிவாலயத்தில் காரை நிறுத்திய பிறகு, ஐயா (ஓபிஎஸ்) காரில் இருந்த பூச்செண்டை எடுக்கச் சொன்னார். அதே சமயம் பின்னால் பல வாகனங்கள் வந்து கொண்டிருந்ததால், விரைவாக ஓரமாக நிறுத்தி பூச்செண்டை எடுத்தேன்" என்று விளக்கினார்.

மேலும், "அந்த வீடியோவை வேண்டுமென்றே கட் செய்து, சிலர் தவறாகப் பரப்புகிறார்கள். நான் இறங்கி ஓடிப் போனதாக சொல்கிறார்கள். ஆனால், அதே இடத்தில் இருந்து ஐயாவை பிக் அப் செய்து விமான நிலையத்துக்குக் கொண்டு சென்றேன். முழு வீடியோவை யாரும் காட்ட மாட்டேன் என்கிறார்கள்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
தன்னைப் பற்றி பரவும் வதந்திகளால் மனம் வருத்தமடைந்த அவர், "நான் ஒரு சாதாரண ஓட்டுநர் தான். என் வாழ்க்கையில் ஏன் இப்படி மண்ணை அள்ளிப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போதும் ஐயாவுடன்தான் இருக்கிறேன். ஐயாவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்" என்று உறுதியாகக் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஓ.பன்னீர் செல்வம், இரு முறை முதல்வராகினார். அதன் பிறகு ஜெயலலிதா மறைந்தவுடன் கடந்த 2016 இறுதியில் முதல்வராகி இரு மாதங்கள் இருந்தார்.
ஆனால் அவரை சசிகலா தரப்பு ராஜினாமா செய்ய சொல்லியதை அடுத்து ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். இதையடுத்து 2017ஆம் ஆண்டு தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதையடுத்து சில ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியோடு மீண்டும் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அதிமுகவை எடப்பாடி பழனிசாமி முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
இதையடுத்து அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் எத்தனையோ முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து சட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பாஜக சிபாரிசில் அதிமுகவில் நுழைந்துவிடலாம் என்ற ஓபிஎஸ் நினைப்பிலும் மண் விழுந்தது.
ஓபிஎஸ்ஸுடன் இருந்த ஆதரவாளர்கள் திமுகவிலும் தவெகவிலும் இணைந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்துவிட்டார். இதை அதிமுகவினர் கண்டித்து வருகிறார்கள். ஓபிஎஸ்ஸுடன் மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஆதரவாளர்கள் இணைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல ஓபிஎஸ் வந்தார். அப்போது காரை, அறிவாலய போர்டிக்கோவில் நிறுத்திய டிரைவர் வேகமாக சீட் பெல்ட்டை எடுத்துவிட்டு விர்ரென எங்கோ சென்றார்.
இந்த வீடியோ வைரலானது. திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, "உன் வேலையும் வேண்டாம், நீயும் வேண்டாம்" என ஓபிஎஸ்ஸை அந்த டிரைவர் அப்படியே விட்டுச் சென்றதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில்தான் அன்று நடந்தது என்ன என்பது குறித்து ஓபிஎஸ்ஸின் டிரைவர் விளக்கியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications