அதிமுக அடையாளங்களை அழித்த ஓபிஎஸ்.. வீட்டு கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னம் அகற்றம்.. மாறிய கலர்!
சென்னை: திமுகவில் இணைந்ததுமே அதிமுக அடையாளங்களை முற்றிலுமாக துறந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் நுழைவாயில் கதவில் பொருத்தப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் அகற்றப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டின் சுவற்றில் அதிமுக கட்சி (கருப்பு - வெள்ளை - சிவப்பு) வண்ணம் மாற்றப்பட்டு திமுக கட்சிக் கொடி வண்ணம் (கருப்பு - சிவப்பு) தீட்டப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியில் எப்படியாவது சேர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். இதற்காக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தொடங்கி நடத்தி வந்தார். தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓபிஎஸ்ஸை ஏற்கவில்லை.

ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் தன்னை இணைக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவுக்கு சென்று விட்டனர். அதேபோல, கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தவெகவுக்கு சென்றுவிட்டனர். ராஜ்யசபா எம்.பி தர்மர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டார்.
ஓபிஎஸ்ஸுக்கு ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், புதிய கட்சியை தொடங்கிவிட்டார். சசிகலாவும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதனால், தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆன நிலையில், ஓபிஎஸ் அதிரடி முடிவை எடுத்தார். அதன்படி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து, முதல்வர் ஸ்டாலினிடம் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் வருகைக்கு பச்சைக்கொடி காட்டிய நிலையில் அண்மையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினும் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து, ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினருக்கான படிவத்தில் ஓபிஎஸ் கையெழுத்திட்டார். ஓபிஎஸ் உடன், அவரது மகனும், முன்னாள் எம்.பியுமான ரவிந்திரநாத், ஓபொஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி ஓம் சக்தி சேகர் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக சார்பில் 3 முறை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால், திமுக சார்பில் தேனி தொகுதியில் அவர் போட்டியிட முயற்சி எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் தனது காரின் முன்பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து இருந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அவர் இந்த படத்தை அகற்றியது இல்லை. ஆனால், திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, அன்றைய தினமே ஜெயலலிதா படத்தை அகற்றிய ஓபிஎஸ், அதே இடத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார். மேலும், காரின் முன்புறத்திலும் திமுக கொடியை பொருத்தினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது இல்லத்தின் நுழைவாயில் கதவில் பொருத்தப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் அகற்றப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டில் இருந்த அதிமுக கட்சி (கருப்பு - வெள்ளை - சிவப்பு) வண்ணம் மாற்றப்பட்டு திமுக கட்சிக் கொடி வண்ணம் (கருப்பு சிவப்பு) தீட்டப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் பயன்படுத்தும் அனைத்து கார்களிலும் இருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டை பாக்கெட்டிலும் ஜெயலலிதா படத்திற்கு பதிலாக ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார் ஓபிஎஸ். திமுகவில் இணைந்ததுமே, அதிமுக அடையாளங்களை முற்றிலுமாக துறந்துள்ளார் ஓபிஎஸ்.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications