"உங்களுக்கு என்னை பத்தி தெரியாதா".. விளக்கம் தந்த ஓபிஎஸ்.. கூல் ஆன முதல்வர்..!
சசிகலா குறித்து ஓபிஎஸ் முதல்வரிடம் விளக்கம் தந்தாராம்
சென்னை: தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு தகவல் ஓடி கொண்டிருக்கிறது.. அது சசிகலாவை கட்சிக்குள் மீண்டும் இணைப்பது குறித்த செய்திதான்.
இழுத்து மூடப்பட்ட ஒரு விஷயம் தற்போது காரணத்தோடு புகைய தொடங்கி உள்ளது.. சசிகலா பற்றின பேச்சு அடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது..
இந்த சமயத்தில் மீண்டும் அவரது வருகை குறித்து யூகங்கள் வலம் வருகின்றன. அதுவும் அதிமுக தரப்பில் இருந்து வருகின்றன.

உண்மையா?
இது உண்மையா? என்ன நடக்கிறது அதிமுகவில்? சசிகலா இணைப்பு குறித்து பரிசீலிப்போம் என்று ஓபிஎஸ் சொல்லி இருந்தாலும், உண்மையில் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன? என்பது இதுவரை தகவல் வெளியாகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் இதுகுறித்து நாம் சில அதிமுக நிர்வாகிகளிடமே பேசினோம்.. அவர்கள் அனுமானத்தில் சொன்னதாவது:

கோபம்
"ஓபிஎஸ்தான் இந்த விவகாரத்தை துவக்கி இருக்கிறார்.. டிடிவி தினகரன் பற்றியும் பேசியிருக்கிறார்.. டிடிவி மீது தனக்கு கோபம் இல்லை.. விசுவாசத்துடன் தான் இருந்து வருவதாகவும், ஆனால், அவசரப்பட்டு அவர் முடிவெடுப்பதுதான் தனக்கு பிடிக்காத ஒன்று என்று கூறியுள்ளார். அதேபோல, சசிகலா மீது கோபம் இல்லை.. இணைப்பு குறித்து பரிசீலிப்போம் என்ற ஒரு வார்த்தையையும் கூறியுள்ளார்.

லிஸ்ட்
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்பாளர் லிஸ்ட் வெளியான பிறகு ஓபிஎஸ் சொன்னதுதான் ஸ்பெஷல். ஓபிஎஸ் இப்படி பேசியதற்கு எடப்பாடியார் சற்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார் போலும்.. ஆனால், சேலம் வந்த ஓபிஎஸ்சை முதல்வர் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.. அப்போது அந்த பேட்டியில் ஏன் அப்படி சொன்னேன் என்று ஓபிஎஸ் தன் தரப்பு விளக்கத்தையும் முதல்வருக்கு தந்திருக்கிறார்..

அதிருப்தி
"உங்களுக்கு என்னை பத்தி தெரியாதா.. நான் அப்படி செய்வேனா? தென் மாவட்டங்களில், 60 தொகுதிகள் இருக்கின்றன.. சசிகவை பகைத்து கொண்டு தென்மாவட்டங்களில் வெற்றி என்பது அவ்வளவு ஈஸி கிடையாது.. சசிகலாவுக்கு சாதகமாக சொன்னால், முக்குலத்தோருக்கு நம் மீதான அதிருப்தி விலகும்.. இப்படி சொன்னால், தினகரன் கட்சிக்கும் தேவையில்லாமல் வாக்குகள் போவது குறையும்.. அமமுகவுக்கு செல்வது தடுக்கப்படும்.. அதனால்தான் அப்படி பேசினேன்" என்றாராம்.

இணைப்பா?
இதைக் கேட்டபிறகுதான் முதல்வர் நிம்மதி அடைந்ததாக தெரிகிறது.. முதல்வரிடம் ஓபிஎஸ், இப்படி விளக்கம் தந்ததாக கேள்விப்பட்டோமே தவிர, எந்த நேரத்திலும் சசிகலா இணைவது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.." என்றனர்.












Click it and Unblock the Notifications