பிரதமர் மோடி இதயத்தில் ஓபிஎஸ் அண்ணனுக்கு தனி இடம் இருக்கு.. அண்ணாமலை சொன்ன அந்த வார்த்தை!
திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் ஓபிஎஸ் அண்ணனுக்கு தனி இடம் இருப்பதாக கூறிய அண்ணாமலை, பாஜக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, கூட்டணியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் பாஜக கூட்டணியில் இடம்பெற்றனர். அதற்கேற்ப 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக மற்றும் ஓபிஎஸ் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா என்ற குழப்பம் எழுந்தது. இன்னொரு பக்கம் அமமுகவின் டிடிவி தினகரன், தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறி வருகிறார்.
இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் பேசுகையில், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் நேரடியாகவே அமித் ஷா சந்திக்காதது வருத்தம் என்று கூறியதால், பாஜகவால் கழற்றிவிடப்பட்டதாக சில விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசுகையில், ஊட்டியில் வெயில் குறைவு என்பதால், முதலமைச்சருக்கு சிறிய குழப்பம் இருந்திருக்கலாம்.
சென்னைக்கு வந்தபின் 2026ல் திமுக தோல்வியடைந்துவிடும் என்பது தெளிவாக புரிந்துவிடும். ஓபிஎஸ் ஐயாவின் கருத்துகளுக்கு எங்களின் தலைவர்கள் பதில் சொல்லிவிடுவார்கள். எல்லோரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். யாரும் பிரிந்து செல்லவில்லை. பாஜக கூட்டணி வலுவாகவே இருக்கிறது. திமுகவில் இருப்பவர்கள் எங்கள் கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்கிறார்கள்.
நான் ஒரு தொண்டனாக பணியை செய்து கொண்டிருக்கிறேன். கூட்டணி தொடர்பாக விவகாரங்களில் ஒதுங்கி இருக்கிறேன். ஓபிஎஸ் அண்ணன் எப்போதும் எங்களுடன் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் ஓபிஎஸ் அண்ணனுக்கு சிறப்பான இடம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications