சட்டசபையில் அப்படித்தான் பேசுவேன்.. ஓபிஎஸ் விவகாரம்.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை முதலமைச்சரின் பல் உரை உள்ளது. முதலமைச்சர், அமைச்சர்களின் செயல்பாடு பல இடங்களில் சர்ச்சையாகி வருகிறது. சபாநாயகர் பிரபாகர் நடுநிலையாக செயல்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. மறுபக்கம் அவரின் செயல்பாடுகளும் விமர்சனமும் இருக்கவே செய்கிறது. முதலமைச்சர் விஜயின் கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க சொன்ன ஓ. பன்னீர்செல்வத்துக்கு, சபாநாயகர் அளித்த பதில் வைரலானது. இதுகுறித்து ஜேசிடி பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.

சட்டசபை கூட்ட தொடரில் தவெக திமுக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. அதிமுக உறுப்பினர்களும் அவ்வபோது தவெகவை பாராட்டுவது, விமர்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். திங்கள்கிழமை நான் எல்லாவற்றுக்கு பதிலளிக்கிறேன். யாரும் ஓடிவிட வேண்டாம் என விஜய் கூறினார். அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதையெல்லாம் நீக்க முடியாது என்று சபாநாயகர் கறாராக கூறினார்.

JCD Prabhakar OPS

ஓபிஎஸ் விவகாரம்

அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பனிப்போர் நிலவியபோது, ஜேசிடி பிரபாகர் ஓபிஎஸ் அணியில் இருந்தார். அப்போதைய வீடியோவையும், சட்டசபை நிகழ்வு வீடியோவையும் இணைத்து சமூகவலைதளங்களில் வைரலாக்கினர். திமுகவினர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உள்நோக்கத்துடன் அவ்வாறு நடந்து கொண்டார். சபாநாயகர் இப்படி நடந்து கொள்ள கூடாது என்று விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "அனைத்து கட்சி உறுப்பினர்கள் உதவியுடன் சட்டப்பேரவை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நிறைவாக உள்ளது. திங்கள்கிழமையன்று முதலமைச்சரின் பதில் உரை உள்ளது. சபாநாயகராக என்னுடைய பணியை மக்கள் பாராட்டுகிறார்கள். இந்த பொறுப்பில் என்னை அமரவைத்துள்ள தவெக தலைவரும், மக்கள் நெஞ்சில் நீங்கமற நிறைந்துள்ள முதலமைச்சருக்கு தான் இந்த பெருமை, புகழ் எல்லாம் செல்லும்.

இசக்கி சுப்பையா மனு

இந்த பொறுப்புக்கு வரவேண்டுமென விரும்பி அனைத்து எம்எல்ஏக்களின் ஏக மனதான ஆதரவோடு இந்த பொறுப்பில் அமரவைத்துள்ளனர். அனைத்து எம்எல்ஏக்களும் சரியான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இன்னும் நிலையான நீடித்த பணியை தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை, கவனத்தோடு அனைத்து எம்எல்ஏக்களும் செயலாற்றி கொண்டிருக்கிறார்கள். வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக செயலாற்றுவார்.

இசக்கி சுப்பையா மீண்டும் எம்எல்ஏவாக தொடர அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக என்னிமும் கடிதம் வழங்கியுள்ளார். அவரளித்த மனு ஆய்வில் உள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் அதற்கான பதிலை அளிக்கிறேன்" என்றார். ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, "சட்டசபைக்குள் வந்துவிட்டால் சட்ட விதிகளுக்குட்பட்டு தான் நான் பேச முடியும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் அந்த பதிலை நான் அளித்திருக்கிறேன்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+