ஏங்க! நிறைய பேருக்கு சுகர் இருக்கு! மயங்கி விழுறாங்க! சமாளிக்க முடியலை! ஓபிஎஸ் பேச்சால் அவையில் கலகல

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இங்கே நிறைய பேருக்கு சுகர் இருக்குங்க, மயங்கி மயங்கி விழுகிறார்கள், வேதனையா இருக்கு" என அமைச்சர் அருண்ராஜின் நீளமான பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் காமெடியாக சொன்னதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழக சட்டசபைில் கடந்த 5 ஆம் தேதி பொது பட்ஜெட்டும் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பொது விவாதம் நடந்தது.

arunraj long speech

இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை நேற்று கூடியது. அப்போது சுகாதாரத் துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.

அமைச்சர்களான அருண்ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். அதை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலுரை அளித்தனர்.

இதனால் அமுதன் கொலை, கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது முதலே அவையில் சூடான வாதங்கள் நடந்தன. போதை பிரச்சனை குறித்து ஆதவ் அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடுமையாக வாதமிட்டனர்.

அமைச்சர் அருண்ராஜ் தனது துறை மீதான கேள்விகளுக்கு அதிக நேரமாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். இதனால் அவரது பேச்சு நேற்று மாலை 3.30 மணியை கடந்து சென்றது.

அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும் போடி திமுக எம்எல்ஏவுமான ஓபிஎஸ், "காலை 9.30 மணிக்கு நமது சட்டசபை கூட்டம் தொடங்கியது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் 3.30 மணிக்கு பேச தொடங்கினார்.

இப்போது மணி 3.52 ஆகிவிட்டது. துறை பற்றிய அல்லது எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்குதான் அவரது பதிலுரை இருக்க வேண்டுமே தவிர தேவையில்லாத பிரச்சனைகளை பற்றி பேசுகின்றனர். இங்கே நிறைய பேருக்கு சுகர் இருக்குங்க, நான் உள்பட அனைவரும் மயங்கி மயங்கி கீழே விழுகிறார்கள். வேதனையாக இருக்கு.. சமாலிக்க முடியல.. இல்லையென்றால் பதிலுரையை காலையில் வைத்துக் கொள்ளுங்கள் என ஓபிஎஸ் கிண்டலாக கூறியதும் அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

டம்பளரில் தண்ணீர் வழங்குவதற்கு பதிலாக தண்ணீர் பாட்டிலை கொடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்த போது கூட ஓபிஎஸ், "தண்ணீர் பாட்டில் வேண்டாம், கோபம் வந்தால் யாராவது வீசிவிடுவார்கள்" என தனக்கு நேர்ந்த பிரச்சனையை சுட்டிக் காட்டி பேசிய போது கூட அவையில் அனைவரும் சிரித்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+