Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OPS in DMK: ஓபிஎஸ்ஸுடன் இன்று திமுகவில் இணைந்தவர்கள் யார் யார்? வெல்லமண்டி நடராஜனை காணோமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் திமுகவில் இணைத்துக் கொண்ட நிலையில் அவருடன் யார் யார் இணைந்தார்கள் என்பதை பார்க்கலாம்.

திமுகவில் யாரெல்லாம் இன்று திமுகவில் இணைந்தனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  • ஓபிஎஸ் மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்
  • உசிலம்பட்டி ஐயப்பன் எம்எல்ஏ
  • இவர்களது ஆதரவாளர்கள்

உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

mk stalin ops dmk

ஓபிஎஸ்ஸுடன் ஏற்கெனவே இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். குன்னம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ராமசந்திரனும் திமுகவில் இணைவதாக தெரிவித்தார்.

ஆனால் அடுத்த நாளே தனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தான் அரசியலை விட்டே விலகுகிறேன் என சொல்லிவிட்டார்.

தற்போது வெல்லமண்டி நடராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, அக்கட்சியில் இலக்கிய அணித் தலைவராக இருந்து வருகிறார். டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்து திமுகவில் இணைந்த தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர், தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது தேனி மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு தினகரன் அணியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவ்வாறு இணைந்த அவருக்கு 50 நாட்களுக்குள் கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அவருக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அது போல் கோவை செல்வராஜும் திமுகவில் இணைந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார்.

2020 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த லட்சுமமணனுக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அது போல் அதிமுகவில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இருந்த வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்ததும் இலக்கிய அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அதிமுகவில் இருந்த எ.வ.வேலு பின்னர் திமுகவில் இணைந்தார். தற்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்து வருகிறார். அது போல் சாத்தூர் ராமசந்திரன், எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.கண்ணப்பன், பி.கே. சேகர்பாபு, ராஜகண்ணப்பன் ஆகியோரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தற்போது திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர்.

இவர்களில் சிலர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ் திமுகவில் இணைவார் என பேசப்பட்டது. அல்லது அவரது அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகம், திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் சேகர்பாபு, ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசியிருந்தார். அது போல் ஓபிஎஸ்ஸும் முதல்வரை இரு முறை சந்தித்தார். இந்த நிலையில் நேற்றே ஓபிஎஸ், திமுகவில் இணைவார் என சொல்லப்பட்ட நிலையில் இன்று காலை ராகு காலத்திற்குள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து தன்னை இணைத்துக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+