இரட்டைஇலை முடக்கப்படுமா? ”அந்த” தலைவருடன் சந்திப்பு.. வேகமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்! இபிஎஸுக்கு செக்
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமெடுத்துள்ள நிலையில், ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆர் காலத்து அதிமுக நிர்வாகியான பன்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து இருப்பது இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கான நகர்வு என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்ம யுத்தத்தை தொடர்ந்து, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டர் எடப்பாடி பழனிசாமி.
பல மாதங்களாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக 2 பிரிவுகளாக செயல்பட்ட நிலையில், டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை நிறுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவே தொடர, அதிமுகவின் பொதுச்செயலாளராக யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். அதன் பின்னர் கட்சியின் புதிய உயர் பதவியாக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.

மோதல் தொடர்கதை
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். இருப்பினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது.

ஒற்றைத் தலைமை
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உள்ளேயே ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். ஒற்றை தலைமை குறித்து முழக்கங்களும் எழுப்பட்டன. அதன் பின்னர் இபிஎஸ் ஆதரவாளர் என்று கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதை வெளியே வந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியதால் இப்பிரச்சனை பூதாகரம் எடுத்தது.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதனை தொடர்ந்து நடைபெற்ற சர்ச்சைகளுக்கு பின்னர் இரு தலைவர்களையும் அவரவர் தரப்பு ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில் இன்று காலை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் இருந்தபோது வெளியே குழுமி இருந்த அவரது ஆதரவாளர்களுக்கும் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

மூத்த நிர்வாகிகளை சந்தித்த ஓபிஎஸ்
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம், 2 மூத்த அதிமுக தலைவர்களை சந்தித்தது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. அதில் ஒருவர் மக்களவை முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது தம்பிதுரை அவரை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகியான பன்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை கேட்டுப்பெற்று இருக்கிறார்.

பன்ருட்டி ராமச்சந்திரன்
அதனை தொடர்ந்து எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகியான பன்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை கேட்டுப்பெற்று இருக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் 2011 தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தபோது தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் ஆக்கியவர். அரசியல் சாணக்கியராக அறியப்படும் அவர், ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் விஜயகாந்த் நாக்கை துருத்தி சண்டை போட்டதால் விஜயகாந்திடம் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

இரட்டை இலை முடக்கப்படுமா?
என்னதான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் கூடுதல் அதிகாரத்தை கட்சியில் வைத்து இருக்கிறார். ஒருவேளை ஒற்றை தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டால், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கான காய்களை ஓ.பன்னீர்செல்வம் நகர்த்துவார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கடிதம் ஒன்றும் ஓபிஎஸ் தரப்பிலிருந்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய சட்ட ஆலோசனைகளையும், கட்சியின் சட்ட விதிகள் குறித்த கூடுதல் தகவல்களையும் பெறுவதற்காகவே மூத்த நிர்வாகியான பன்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications