மிக்சரு இல்ல சிக்சரு.. சைலண்டாய் ஓ.பன்னீர்செல்வம் பார்த்த வேலை! அவர் கூட கூட்டணியாமே? ஷாக் ஆன பாஜக!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தற்போதிருந்தே தமிழ்நாடு தயாராகி வருகிறது. அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் ஏற்கனவே கூட்டணியில் இருந்தவர்களை மீண்டும் சேர்க்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை வெளியேற்ற எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில் பக்காவாய் காய் நகர்த்தி இருக்கிறார் பன்னீர்செல்வம். புதிய கட்சி ஒன்றை அவர் தொடங்க இருப்பதாகவும் தேவைப்பட்டால் விஜய் உடன் கூட்டணி வைக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை அனைத்து கட்சிகளும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கின்றன. அதற்காக தற்போதையிலிருந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், திமுக கூட்டணியும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான்.
அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் இன்னும் சில குழப்பங்கள் நிலவுகிறது. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும், எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார்.

அதே நேரத்தில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது என இபிஎஸ் கட் அண்ட் ரைட்டாக பேசி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது. காரணம் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர்களுக்கு அதிமுகவில் இனி இடமே இல்லை எனவும் கூறினார்.
தற்போது கூட்டணி என்று வந்துவிட்டால் ஒரே மேடையில் தோன்ற வேண்டி இருக்கும், அவர்கள் குறித்து பேச வேண்டி இருக்கும் என்பதால் கூட்டணியில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். இந்த நிலையில் எப்படியும் பழனிச்சாமி தனக்கு எதிராக வேலை செய்வார் முன்கூட்டியே உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை அவர் ஆரம்பித்து இருக்கும் நிலையில் புதிதாக கட்சியை ஆரம்பித்த விடலாம் என திட்டமிட்டுள்ளாராம். எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை தனது ஆதரவாளர் மூலம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான ஒப்புகையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் வந்தால் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு ஒரு மாநாடு நடத்தி விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டது பண்ருட்டி ராமச்சந்திரன் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். மேலும் பாஜக அதிமுக கூட்டணி அல்லாமல் தமிழகத்தின் மூன்றாவது ஒரு கூட்டணியை உருவாக்கி விடலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறாராம்.
அந்த வகையில் விஜய், நாம் தமிழர் சீமான் ஆகியோரிடம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் விஜய்க்கு குறைந்தது 10 சதவீத வாக்குகளால் கிடைக்கும். ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்கும் நல்ல வாக்கு சதவீதம் இருக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள தனது செல்வாக்கு மூலம் குறைந்தது 25 சதவீத வாக்குகளையாவது பெற்று விடலாம் என்பது ஓ.பன்னீர் செல்வத்தின் திட்டம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். வரும் நாட்களில் பல அதிரடியான அறிவிப்புகள் வெளியாகலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications