எடப்பாடிக்கு “செக்” வைக்கும் பொதுக்குழு வழக்கு.. நீதிபதிய மாத்துங்க! தலைமை நீதிபதியிடமே சென்ற ஓபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுக்குழு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரியிடம் ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டுள்ளார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று நிறைவேற்றப்பட்டு இருந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

எடப்பாடி நடவடிக்கை
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

போராடும் ஓபிஎஸ்
அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கிய எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழக செயலாளராக எஸ்.பி.வேலுமணியையும், புதிய அமைப்புச் செயலாளர்களையும் நியமித்து வருகிறார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வரும் சூழலில் மறுபக்கம் வழக்குகளை தொடர்ந்து கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார்.

ஓபிஎஸ் வழக்கு
அதன் ஒருபகுதியாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செலவம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கு விசாரணை
இந்த நிலையில் பொதுக்குழுவை நடத்தலாம் என்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 வாரங்களில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நாளை (ஆகஸ்டு 4) அன்று உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

தலைமை நீதிபதியிடம் முறையீடு
இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும், வேறு நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் எனவும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து இன்று காலை கடிதம் ஒன்றை வழங்கினார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் இதே கோரிக்கையை தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இதனை கேட்ட நீதிபதி போதிய காரணமின்றி வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற முடியாது என்றாலும், உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications