ம்ம்ஹும்! திமுக 10 இடத்தில் கூட ஜெயிக்காது.. அடித்துச் சொல்லும் உளவுதுறை ரிப்போர்ட்.. ஓபிஎஸ் பகீர்
சென்னை: இன்றைய நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தினால் திமுக 10 இடத்தில் கூட வெல்லாது என உளவுப்பிரிவு தகவல் கூறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதன் செயல்பாடுகளால் பொதுமக்கள் திருப்தி அடைந்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை ஆகியவற்றை திமுக கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் திமுகவோ ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது 5 ஆண்டுகளுக்கானது. தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்கிறது.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. திமுக அரசின் செயல்பாடுகளை அதிமுகவும் பாஜகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. மேலும் மின்வெட்டு பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது. திமுக ஆட்சி என்றாலே மின் வெட்டு என்று பேசப்படுகிறது.

அரசின் சாதனைகள்
இந்த நிலையில் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல அம்மா பேரவைசெயலாளர் சார்பில் மாவட்டச் செயலாளர்களுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னை ராயப்பேட்டையில உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

இரு நாட்கள்
இந்த இரு நாட்கள் நடந்த பயிற்சி முகாமை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அதிமுக அரசின் சாதனைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பேசுகையில் தேர்தல் நேரத்தில் திமுக வழக்கம் போல் வாக்குறுதிகளை கொடுக்கும்.

10 இடம் கூட தேறாது
ஆனால் அதை நிறைவேற்றவே மாட்டார்கள். ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு காது கேட்கவில்லை. இந்த சூழலில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தினாலும் திமுக 10 இடங்களில் கூட வெற்றி பெறாது. இதை நான் சொல்லவில்லை. மத்திய மாநில அரசுகளின் உளவுத் துறை சொல்கிறது. நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன், திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை நமது வேகம் குறையக் கூடாது. எதிர்வரும் தேர்தல் நமக்கானது, அதற்காக அனைவரும் உழைத்திட வேண்டும் என ஓபிஎஸ் பேசியுள்ளார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications